நீலகிரி மாவட்டத்தில் கடந்த நாட்களில் பெய்து வரும் தொடர் மழையின் காரணமாக மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் தடுப்பு சுவர்கள் மற்றும் வீடுகள் மரங்கள் விழுந்து பாதிப்புகள் ஏற்பட்ட வண்ணம் உள்ளன.
தொடர் மழையின் காரணமாக கடந்த இரண்டு நாட்களாக விடிய விடிய கனமழை பெய்து வருகிறது. குன்னூர் சுற்றுவட்டார பகுதிகளில் 11 வீடுகள் இடிந்துள்ளன.
இந்த சம்பவத்தை அறிந்த குன்னூர் வருவாய் கோட்டாட்சியர் பூஷண் குமார், வட்டாட்சியர் சிவக்குமார் ஆகியோர் முதற்கட்டமாக 11 பாதிக்கப்பட்ட நபர்களுக்கு தலா ரூ.4,100 வழங்கினர்.
குன்னூர் வருவாய் கோட்டாட்சியர்
இது குறித்து குன்னூர் வருவாய் கோட்டாட்சியர் கூறுகையில் நீலகிரி மாவட்டத்தில் பல்வேறு முன் எச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
குன்னூர் சுற்றுவட்டாரத்தில் உள்ள பள்ளிகள், திருமண மண்டபங்களில் மழையினால் பாதிக்கப்பட்ட நபர்களுக்கு உதவுவதற்காக முகாம்கள் ஏற்படுத்தப்பட்டு தயார் நிலையில் உள்ளது. குன்னூர் சுற்றுவட்டார பகுதிகளில் மழை காலங்களில் அவசர உதவிக்கு 1077 தொலைபேசி எண்ணைப் பயன்படுத்தலாம், என்றார்.