பருவநிலை மாற்றங்களால் உலகில் ஏற்படும் பாதிப்புகள், அவற்றை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகள் குறித்தெல்லாம் சிறு வயதிலிருந்தே குழந்தைகளுக்கு எடுத்துரைப்பதும், அது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதும் அவசியம். காரணம் இன்றைய குழந்தைகள் தான் நாளை நம் நாட்டின் தலைவர்கள்.
நம் நாட்டை மேம்படுத்தப்போகும் சீர்திருத்தவாதிகள்.
பருவநிலை மாற்ற விளைவுகளில் இருந்து அவ்வளவு சுலபத்தில் எந்தவொரு நாடும் தப்பி விட முடியாது, என்ற போதிலும் அதன் தாக்கத்தை குறைக்கும் நடவடிக்கைகளை பற்றிச் சிந்திக்கலாம்.
புதிய கண்டுபிடிப்புகளை அறிமுகப்படுத்தலாம். அந்த கண்டுபிடிப்பு வருங்காலத்தை வளப்படுத்துவதாக இருக்க வேண்டும். அதற்கு குழந்தை பருவத்திலேயே சுற்றுச்சூழல் குறித்த விழிப்புணர்வை பிள்ளைகள் மனதில் விதைக்க வேண்டியது அவசியம்.



