நவீன மருத்துவத் துறை யில் மயக்கவியல் துறையின் பங்களிப்பு மற்றும் அதன் முக்கியத்துவம் குறித்து அனைவருக்கும் உணர்த்தும் பொருட்டு ஆண்டுதோறும் உலக மயக்கவியல் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.
இதனை முன்னிட்டு விநாயகா மிஷன் விம்ஸ் மருத்துவமனை வளாகத் தில் உள்ள அலைடு ஹெல்த் சயின்ஸ் துறையின் மயக்கவியல் தொழில்நுட்ப பிரிவு, பல்கலைக்கழகத்தின் வேந்தர் டாக்டர் கணேசன் வழிகாட்டுதலின்படி, உலக மயக்கவியல் தினத்தை கொண்டாடியது.
துறையின் டீன் பேராசிரியர் டாக்டர் செந்தில்குமார் முன்னிலை வகித்து பேசும்போது, மயக்கவியல் தினத்தின் வரலாறு, முக்கியத்துவம் குறித்து மாணவர்களுக்கு எடுத்துரைத்தார்.
விம்ஸ் மருத்துவமனை
விம்ஸ் மருத்துவமனை மயக்கவியல் துறையின் தொழில்நுட்ப வல்லுநர்கள் கிஷோர், மோகன் ஆகி யோர் கலந்து கொண்டனர்.
மயக்கவியல் தொழில் நுட்ப பிரிவு மாணவிகளின் மௌன மொழி நடனம், கலை நிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டது.
குழந்தைகள் பராமரித்தல் மற்றும் அவர்களின் வளர்ச்சியில் கவனம் செலுத்துதல் என்பதை மையமாகக் கொண்டு கருவில் குழந்தை வளர்ச்சியினை ஒவ்வொரு நிலைப்பாட்டினையும் உணர்த்தும் வண்ணம் வடிவமைத்து கல்லூரி வளாகத்தில் நிறுவினர்.
இதனை துறை பேராசிரியர் டாக்டர் செந்தில்குமார் திறந்து வைத்தார்.
ஏற்பாடுகளை துறையின் மயக்கவியல் தொழில்நுட்ப பிரிவின் பொறுப்பாளர் உமா மகேஸ்வரி, அறுவை அரங்க தொழில்நுட்ப பிரிவின் பொறுப்பாளர் விக் னேஸ்வரா, விரிவுரையாளர் முத்தமிழ்செல்வன் ஆகியோர் செய்திருந்தனர்.