ஒரே வாரத்தில் 5 முறை அதிகரித்து வரலாறு காணாத அளவுக்கு பெட்ரோல், டீசல் விலை உயர்ந்துள்ளது. மும்பையில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.113.46க்கு விற்பனையாகிறது.
இந்தியாவில் கடந்த செப்டம்பர் மாதம் 28ம் தேதிக்கு பின் 21 முறை பெட்ரோல் விலை உயர்த்தப்பட்டுள்ளது. இதன்மூலம் ரூ.6.40 அதிகரித்துள்ளது.
டீசல் விலையும் செப்டம்பர் 24ம் தேதிக்கு பின் 24 முறை உயர்த்தப்பட்டு, இந்த காலக் கட்டத்தில் ரூ.7.50 ஏற்றம் கண்டு இருக்கிறது.
இவ்வாறு தொடர்ந்து அதிகரித்து வரும் பெட்ரோல், டீசல் விலை வாகன ஓட்டிகளுக்கு பெரும் சுமையாக அமைந்துள்ளது. அத்துடன் வாகன விற்பனையும் மந்தமாக உள்ளது.



