நடிகை வரலட்சுமி சரத்குமார் நடிக்கும் புதிய திரைப் படத்திற்கான பூஜை கோவையில் நேற்று நடைபெற்றது.
டீம் ஏ வென்டர்ஸ் நிறுவனம் தயாரிப்பில் ‘வி-3’ என்ற திரைப்படம் உருவாக உள்ளது. இயக் குனர் அமுதவாணன் இயக் கத்தில் உருவாகும் இந்த படம் கிரைம் திரில்லர் கதை பின்னணியில் உருவாகிறது.
ஏலன் செபாஸ்டியன் இசைய மைப்பில், பாபநாசம் திரைப்படத்தில் நடித்த எஸ்தர் அனில், கன்னட நடிகை பாவனா கவுடா உள்ளிட்ட நடிகைகளும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளனர்.
இந்த விழாவில் தயா ரிப்பாளர் விஷ்ணு பிரபு கலந்து கொண்டு நடிகர் நடிகையர்களுக்கு வாழ்த்து தெரிவித்தார்.
மூன்று இளம் பெண்களை இணைத்து இக்கதைக்களம் உருவாகியுள்ளதால் படத்திற்கு எதிர்பார்ப்பு கூடியுள்ளது. விழாவில் வரலட்சுமி சரத்குமார் உள்ளிட்ட நடிகர் நடிகை கள் கலந்து கொண்டனர்.



