fbpx
Homeபிற செய்திகள்கோவை மாவட்ட ஆட்சியர் சமீரனுக்கு கொரோனா

கோவை மாவட்ட ஆட்சியர் சமீரனுக்கு கொரோனா

கோவை மாவட்ட ஆட்சியர் ஜி.எஸ்.சமீரனுக்கு கொரோனா நோய்த் தொற்று நேற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கோவை மாவட்டத்தில் கடந்த ஒரு வார காலமாக தினசரி கொரோனா நோய்த் தொற்று 3 ஆயிரத்தை கடந்து வருகிறது.

நோய்த் தொற்று பரவலைக் கட்டுப்படுத்த மாநகராட்சி, மாவட்ட நிர்வாகம் சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்நிலையில், கோவை மாவட்ட ஆட்சியர் ஜி.எஸ்.சமீரனுக்கு நேற்று கொரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டது.

ஆட்சியருக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டதைத் தொடர்ந்து வியாழக்கிழமை கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. நேற்று வெளியான பரிசோதனை முடிவில் ஆட்சியருக்கு கொரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டது.

இதையடுத்து ஆட்சியர் ஜி.எஸ்.சமீரன் தன்னைத் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார்.

படிக்க வேண்டும்

spot_img