உலகின் முன்னணி ஏர்-கம்பிரஸர் உற்பத்தியாளர்களில் ஒன்றான, எல்ஜி எக்யூப்மென்ட்ஸ், 62 ஆண்டுகளுக்கும் மேலான சிறந்த கம்பிரஸ்ட் ஏர் செயல்பாடுகளுடன்அதன் சார்லோட்டை தளமாகக் கொண்ட துணை நிறுவனமான எல்ஜி வட அமெரிக்கா, பத்து ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது.
2012-ல் வட அமெரிக்க சந்தையில் நுழைந்ததில் இருந்து, எல்ஜி அதன் கால்தட த்தை கணிசமாக வளர்த்துள்ளது, பல மறக்க முடியாத மைல்கற்களுடன் கோஸ்ட்டு கோஸ்ட் விரிவடைந்துள்ளது.
வட அமெரிக்காவில் எல்ஜியின் முதல் பத்து ஆண்டுகளில், நிறுவனம் ஒரு விரிவாக்கச் செயல்திட்டத்தின் மூலம் கணிசமாக வளர்ந்தது. சார்லோட்டில் ஒரு சில ஊழியர்களுடன் தொடங்கப்பட்ட இந்நிறுவனம் இப்போது 175 க்கும் மேற்பட்ட ஊழியர்களைக் கொண்டுள்ளது. இதுவரை, வட அமெரிக்கா முழுவதும் 10,000-க்கும் மேற்பட்ட கம்பிரஸர்களை நிறுவி உதவியுள்ளது.
எல்ஜி வட அமெரிக்காவின் தலைவர் அன்வர் வரதராஜ் கூறியதவது
கடந்த தசாப்தத்தில் நிறைய கற்றுக் கொண்டோம். குறிப்பாக வாடிக்கையாளர்களை மையமாகக் கொண்ட நிறுவனமாக இருப்பதன் அர்த்தம் மற்றும் வாடிக்கையாளர்களை முதன்¬ மப்படுத்துவது குறித்து பெரிதும் அறிந்துகொண்டோம்.
எல்ஜி என்பது ஒரு பொறியியல் சார்ந்த நிறுவனமாகும். இது அதன் வளங்களில் கணிசமான அளவை ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டிற்காக செலவிடுகிறது.
தயாரிப்பின் செயல் திறனை மேம்படுத்தும், பராமரிப்புச் செலவுகளைக் குறைக்கும் மற்றும் எங்கள் தயாரிப்புகளின் வாழ்க்கைச் சுழற்சிக்கான உரிமையின் மொத்தச் செலவைக் குறைக்கும் வகையில் வடிவமைப்பு அம்சங்களில் தொடர்ச்சியான முன்னேற்றம் பதிவுசெய்யப்பட்டுள்ளது.
எல்ஜி அடுத்த பத்து ஆண்டுகளுக்கு ஒரு லட்சிய பார்வையை கொண்டுள்ளது. நிறுவனம் வட அமெரிக்கா அதன் மிகப்பெரிய சந்தையாக இருக்கும் என்று எதிர்பார்க்கிறது.
எல்ஜி ஏற்கனவே வட அமெரிக்காவில் கூட்டு முயற்சி திட்டத்தின் ஒரு பகுதியாக ஐந்து புதிய நிறுவனங்களுக்கு சீடிங் செய்துள்ளது.
இதில் கலிபோர்னியாவின் பாட்டன்ஸ், டெக்சாஸின் கம்பிரஸ்டு ஏர் சொல்யூஷன்ஸ்(CAST), G3 இண்டஸ்ட்ரியஸ் சொல்யூஷன்ஸ், ஜென்டெக்ஸ் ஏர் சொல்யூஷன்ஸ் மற்றும் எவர்கிரீன் கம்பிரஸ்டு ஏர் அண்டு வேக்குவம் ஆகியவை அடங்கும்.
எல்ஜி மாணவர்களுக்கான STEM (அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல் மற்றும் கணிதம்) திட்டங்களில் முதலீடு செய்யவும் திட்டமிட்டுள்ளது என்றார்.