‘லாஜிடாக்’ என்ற பெயரில் அனைத்து அம்சங்களையும் ஆல்-இன்-ஒன் டாக்கிங் ஸ்டேஷன் அறிமுகத்தின் மூலம் தொலைதூர மற்றும் ஹைபிரிட் (கலவை – செயல்பாடு) பணியாளர்களுக்கு அவர்களது தனிப்பட்ட ஒர்க் ஸ்பேஸ்களை ‘லாஜிடெக்’ எளிமை யாக்கியிருக்கிறது மற்றும் வீடியோ வழிமுறையிலான சந்திப்பு நிகழ்வுகளை மேம்படுத்தியிருக்கிறது.
இந்த டாக்கிங் ஸ்டேஷனில் ஒன்-டச் சந்திப்புக் கூட்ட கட்டுப்பாடுகளும் மற்றும் அதன் உள்ளேயே பொருத்தப்பட்டுள்ள ஸ்பீக்கர்போனும் இடம்பெற்றுள்ளன. மைக்ரோசாஃப்ட் டீம்ஸ், கூகுள் மீட்TM, கூகுள் வாய்ஸ்TM மற்றும் ஜும்TM ஆகியவற்றில் பயன்படுத்துவதற்கு லாஜிடாக் உரிய அங்கீகார சான்றிதழ் பெற்றிருக்கிறது.
அவர்களது டெஸ்க் அமைப்பை உகந்தவாறு சிறப்பாக மாற்றுவதற்கும் மற்றும் அதிக உற்பத்தி திறன்மிக்க ஒர்க்ஸ்பேஸை உருவாக்கவும் தொழில்முறை பணியாளர்களுக்கு அழகான, எளிமையான தீர்வை இது வழங்குகிறது.
தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் உட்பட நிரந்தரமாக ஹைபிரிட் முறையில் பணியாற்றும் பணியாளர்களைக் கொண்டிருக்கும் முறைக்கு மாறியிருப்பதே இதற்குக் காரணம்.
‘லாஜிடாக்’ அறிமுகம் குறித்து இந்திய மற்றும் தென்மேற்கு ஆசியாவுக்கான ‘லாஜிடெக்’- ன் B2B பிரிவின் தலைவர் ஆனந்த் லட்சுமணன் பேசியதாவது:
கொரோனா பெருந்தொற்று அதன் தாக்குதலை தொடுத்தபோது எமது இறுதிப்பயன்பாட்டாளரது தேவைகளையும் மற்றும் இல்லத்திலிருந்து பணி யாற்றும் புதிய உலகில் நிலவும் சிரம பிரச்சனை களையும் புரிந்துகொள்வதற்காக அவர்களோடு நாங்கள் அதிகளவு நேரத்தை செலவிட்டோம்.
இப்பெருந்தொற்று காலத்தின்போது உருவான இடைவெளியை நிரப்புவதற்காக ஒரு தீர்வை கண்டறிந்தோம். அதாவது, லாஜிடாக் என்ற பெயரில் முக்கியமான, ஒத்துழைப்பு அம்சங்களை தன்னகத்தே உள்ளடக்கிய ஒரு எளிமையான, நவீனமான, நடப்பு நிலையை சீர்குலைத்து மாற்றத்தைக் கொண்டு வருகின்ற ஒரு சிறப்பான தீர்வைக்கொண்டு இந்தியாவில் இந்த புதுமையான தொழில்நுட்பத்தை அறிமுகம் செய்வதிலும்,அனைத்து நபர்கள் மற்றும் அமைவிடங்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கென வடிவமைக்கப்பட்ட தயாரிப்புகளின் விரிவான அணி வரிசையை காட்சிப்படுத்துவதிலும் பெரும் மகிழ்ச்சியும், உற்சாகமும் கொண்டிருக்கிறோம் என்றார்.