fbpx
Homeபிற செய்திகள்ரேசிங் பிரமோஷன்ஸ் உடன் எக்சான்மொபில் கூட்டாண்மை

ரேசிங் பிரமோஷன்ஸ் உடன் எக்சான்மொபில் கூட்டாண்மை

உல்ஃப் ரேஸிங்கால் நடத்தப்படும் இந்தியன் ரேஸிங் லீக்கிற்காக எக்சான்மொபில் லூப்ரிகண்ட்ஸ் பிரைவேட் லிமிடெட் (RPPL) ரேசிங் பிரோமோஷன்ஸ் பிரைவேட் லிமிடெட் (RPPL) உடன் தொழில்முறை லூப்ரிகெண்டாக இணைந்துள்ளது. இதன் மூலம், நாட்டில் மோட்டார்ஸ் போர்ட்ஸ் பிரிவில் ஒரு புரட்சியை உண்டாக்கவுள்ளது.

வரும் 19-ம் தேதி ஹைதராபாத்தில் துவங்கும் உல்ஃப் ரேஸிங்கால் நடத்தப்படும் இந்தியன் ரேசிங் லீக்கின் (IRL) இந்த முதல் பதிப்பு, முன்னாள் ஃபார்முலா ஒன் மற்றும் லீ மேன்ஸ் போட்டிகளில் பங்கேற்ற ஓட்டுனர்கள் உட்பட ஆறு நகரங்களைச் சேர்ந்த ஆண்களும் பெண்களும் இணைந்த ஃபிரான்சைஸி அணிகள் பங்கேற்கும் 4-சக்கர ரேஸிங் லீக் ஆகும்.

3 சுற்றுகளில் 2-வது சுற்று மெட்ராஸ் மோட்டார் இன்டர்நேஷனல் சர்க்யூட்டில் (MMRT) நவம்பர் மற்றும் டிசம்பர் மாத இறுதியிலும் வார இறுதிகளில் நடைபெறும். டிசம்பர் 10-11 தேதிகளில் ஹைதராபாத்தில் மாபெரும் இறுதிப் போட்டி நடைபெறும்.

எக்சான்மொபில் லுபிரிகேன்ட்ஸ் பிரைவேட் லிமிடெட்டின் சிஇஓ ராணா

எக்சான்மொபில் லுபிரிகேன்ட்ஸ் பிரைவேட் லிமிடெட்டின் சிஇஓ ராணா கூறியதாவது: இந்தியன் ரேசிங் லீக்கிற்கான RPPL உடனான எங்கள் கூட்டாண்மை – உல்ஃப் ரேசிங் இந்தியாவில் மோட்டார் ஸ்போர்ட்ஸை ஆதரிப்பதில் கவனம் செலுத்துகிறது.

இதில், பந்தய ஆர்வலர்களின் சமூகம் சக்திவாய்ந்த புதிய சுற்றுகளை உருவாக்குகிறது. நாட்டில் வளர்ந்து வரும் இந்த விளையாட்டை ஆதரிப்பதும், உலகத் தரம் வாய்ந்த நற்பெயர் மற்றும் பிரபலத்தை அடைவதும் எங்களின் அர்ப்பணிப்பு என்று நாங்கள் நம்புகிறோம்.

மோட்டார் ஸ்போர்ட்ஸ் நாடு முழுவதும் பெரும் வரவேற்பினைப் பெறுவதை நாங்கள் காண்கிறோம், நிரூபிக்கப்பட்ட ஆதரவை அணிகளுக்கு வழங்க விரும்புகிறோம்.

மோட்டார் ஸ்போர்ட்ஸில் உண்மையான அடுத்த பெரிய விஷயத்தை – இந்தியாவிலிருந்து உலகிற்கு உருவாக்குவதில் பங்களிக்க விரும்புகிறோம் என்றார்.

இந்தியாவில் மோட்டார்ஸ்போர்ட்ஸ் சூழல் அமைப்பில் ஒரு புதிய சகாப்தத்தை உருவாக்குவதற்கு உலகளாவிய பந்தய தளங்களில் விளையாட்டிற்கான தெரிவுநிலையை உருவாக்குவதை IRL நோக்கமாகக் கொண்டுள்ளது.

எக்சான்மொபில் உடனான கூட்டாண்மை இந்தியாவில் இத்தொழில்துறைக்கு மேலும் மதிப்பைச் சேர்க்கும்.

படிக்க வேண்டும்

spot_img