Homeதலையங்கம்ரூபாய் மதிப்பின் வரலாற்று சரிவு!

ரூபாய் மதிப்பின் வரலாற்று சரிவு!

அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு வேகமாகச் சரிந்து வந்த வேளையில் கடந்த வெள்ளிக்கிழமை வர்த்தகம் முடிந்ததில் இருந்து அதிகப்படியான பாதிப்புகளை எதிர்கொண்டு வந்தது.

இதனால் ரூபாய் மதிப்பு திங்கட்கிழமை வர்த்தகத்தில் மோசமான வரலாற்று சரிவைப் பதிவு செய்துள்ளது.

இந்திய ரூபாய் மதிப்பு மட்டும் அல்லாமல் ஜப்பான் யென் முதல் சீனா யுவான் வரையில் அனைத்து முக்கிய வர்த்தக நாணயங்களின் சரிவுக்கு மிக முக்கியமான காரணம் அமெரிக்காவின் மே மாத பணவீக்கம் தான்.

பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான அமெரிக்கப் பணவீக்க தரவுகள் சர்வதேச முதலீட்டு சந்தையைத் தலைகீழாகப் புரட்டிப்போட்டு உள்ளது.

வல்லரசு நாடான அமெரிக்காவில் எரிபொருள் மற்றும் உணவு பொருட்களின் விலை தொடர்ந்து அதிகரித்து வரும் வேளையில் அந்நாட்டின் பணவீக்கம் சற்றும் எதிர்பார்க்காத வகையில் 40 வருட உச்சத்தைத் தொட்டு உள்ளது.

டிசம்பர் 1981 க்குப் பின் அமெரிக்காவின் நுகர்வோர் பணவீக்கம் மிகப்பெரிய அளவில் அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டை ஒப்பிடுகையில் மே 2022ல் எரிபொருள் விலை சுமார் 34.6% உயர்ந்துள்ளது.

இந்தியாவாக இருந்தாலும் சரி அமெரிக்காவாக இருந்தாலும் சரி பணவீக்கம் உயர்ந்தால் பொருளாதார, வர்த்தக வளர்ச்சியின் வேகம் பெரிய அளவிலான பாதிப்பை எதிர்கொள்ளும்.

இதைத் தொடர்ந்து கட்டுக்குள் வைக்க ஒவ்வொரு நாட்டின் மத்திய வங்கிகள் நாணய கொள்கையில் வட்டி விகிதத்தை மாற்றி, பணப்புழக்கத்தைக் கட்டுப்படுத்த வேண்டும்.

இந்தியச் சந்தையில் இருக்கும் அன்னிய முதலீடுகள் தற்போது வெளியேறத் துவங்கியுள்ளதால் ரூபாய் மதிப்பு வரலாறு காணாத விதமாக 78.27 வரையில் சரிந்துள்ளது.

ரூபாய் மதிப்பு சரியும் காரணத்தால் இந்தியா இறக்குமதி செய்ய பொருட்களின் விலை அதிகரிக்கும், இதில் கச்சா எண்ணெய் முதல் உற்பத்திக்கான மூலப்பொருட்கள் வரையில் அனைத்தும் அடங்கும்.

இது கட்டாயம் மக்களைக் கடுமையாகப் பாதிக்கும். பண வீக்கம் குறைந்து ரூபாய் மதிப்பு சரிவில் இருந்து இந்தியா விரைவில் மீள வேண்டும்!

படிக்க வேண்டும்

spot_img