பவானி நகர அனைத்து வணிகர் சங்கத்தின் 9-ஆம் ஆண்டு தொடக்க விழா மற்றும் வணிகர் பேரவை நிர்வாகிகள் பங்கேற்ற சிறப்பு விழா, சங்கத் தலைவர் சுரேஷ் தலைமையில் பவானியில் நடைபெற்றது.
முன்னதாக, சமுதாய விழிப்புணர்வை வலியுறுத் தும் வகையில் போதை ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி நகரின் முக்கிய வீதிகள் வழியாக நடத்தப்பட்டது. பவானி வட்டார செயலாளர் காதர் அலி (எ) பாபு வரவேற்றார்.
தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப் பின் மாநிலத் தலைவர் விக்கிரமராஜா, வணிகர் களின் ஒற்றுமை மற்றும் உரிமைகளை வலியுறுத்தி வாழ்த்துரை வழங்கினார். தொடர்ந்து, ஈரோடு மாவட்டத் தலைவர் ஆர்.கே. சண்முகவேல் எழுதிய “டிஜிட்டல் போதை யில்..” என்ற விழிப்புணர்வு நூலினை விக்கிரமராஜா வெளியிட்டார்.
விழாவில், சங்கத்தின் வரவு-செலவு கணக்குகளைப் பொருளாளர் குப்புராஜ் தாக்கல் செய்தார். அதனைத் தொடர்ந்து சங்க உறுப்பினர்களுக்கு புதிய உறுப்பினர் சான்றிதழ்கள், அடையாள அட்டைகள் வழங்கப்பட்டன.
நிகழ்ச்சியில் மாநில கூடுதல் செயலாளர் ராஜசேகரன், ஈரோடு மாவட்டத் தலைவர் இரா.க. சண்முகவேல், செயலாளர் வேலா ப.சா.சுந்தரராஜன், பொருளாளர் உதயம் பொ.செல்வம், கோவை மண்டல இளைஞரணி ஒருங்கிணைப்பாளர் பாலகிருஷ்ணன், ஈரோடு மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் அ.லாரன்ஸ் ரமேஷ், மாவட்ட செய்தித் தொடர்பாளர் சாதிக் பாட்சா, சங்கச் செயலாளர் ஜெகதீசன் ஆகியோர் உரை ஆற்றினர்.



