Homeபிற செய்திகள்யுனைடெட் கல்லூரியில் மாநில அளவிலான ஹாக்கி போட்டி

யுனைடெட் கல்லூரியில் மாநில அளவிலான ஹாக்கி போட்டி

தேசிய விளையாட்டு தினத்தை முன்னிட்டு, பெரியநாயக்கன்பாளையம் யுனைடெட் தொழில்நுட்பக் கல்லூரியில் 5-வது மாநில அளவிலான பள்ளிகளுக்கு இடையேயான ஹாக்கி போட்டி நடந்தது.
யுனைடெட் கல்வி நிறுவன உடற்கல்வித்துறை, முன்னாள் மாணவர் விளையாட்டுத்துறை மற்றும் கோவை மாவட்ட ஹாக்கி சங்கம்
இணைந்து போட்டியை நடத்தின.

துவக்க விழாவில் இந்திய கடற்படை அதிகாரிகள் ரஜத் குமார் யாதவ், ஓம்கர் சிங், முன்னாள் ஹாக்கி வீரரும் இந்திய அணி தேர்வாளருமான மொகமது ரியாஸ் பங்கேற்றனர்.
ஆண்கள், பெண்கள் பிரிவுகளில் 14, 17, 19 வயதுக்குட்பட்டோருக்கான போட்டிகளில் 27 பள்ளிகளைச் சேர்ந்த 60 அணிகள் பங்கேற்றன.

ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்டனர்.
நிறைவு விழாவில் தமிழ்நாடு ஹாக்கி சங்க பொதுச்செயலாளர் டாக்டர் பி.செந்தில்குமார், தூத்துக்குடி ஹாக்கி சங்க செயலாளர் டாக்டர் சி.குரு சித்ரா சண்முக பாரதி ஆகியோர் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கினர்.

படிக்க வேண்டும்

spot_img