fbpx
Homeதலையங்கம்யானை சவாரி தொடங்கலாமே?

யானை சவாரி தொடங்கலாமே?

பசுமையான ஆனைமலை புலிகள் காப்பகம் டாப்சிலிப்பில் மீண்டும் யானை சவாரி தொடங்க வேண்டும் என ஏராளமான சுற்றுலா பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இந்த இடத்திற்கு அண்டை மாநிலமான கேரளா, கர்நாடகா, ஆந்திரா மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் சுற்றுலா பயணிகள் வந்து செல்வார்கள். பொள்ளாச்சி நகரில் இருந்து டாப்சிலிப் செல்ல 36 கி.மீ. தூரம் பயணிக்க வேண்டும்.

இதில் சேத்துமடை, வனத்துறை சோதனை சாவடியில் இருந்து டாப்சிலிப் செல்லும் 14 கிலோ மீட்டர் மலைபாதையில் பயணம் செய்யும் சுற்றுலா பயணிகள் வழிநெடுகிலும் வன சாலையையொட்டி மான் கூட்டங்கள், காட்டு மாடுகள், மயில் என அனைத்து வகையான வன விலங்குகளையும் ரசித்தபடி மலைபாதையில் பயணம் செய்கின்றனர்.

டாப்சிலிப் கோழிகமுத்தி முகாமில் 26 வளர்ப்பு யானைகள் உள்ளன. இங்கு வளர்க்கப்படும் யானைகள் டாப்சிலிப் பகுதிக்கு வரும் சுற்றுலா பயணிகளின் மகிழ்ச்சிக்காக வனத்துறை சார்பில் நடத்தப்படும் யானை சவாரிக்கு ஒரு முறை சவாரி செய்ய 800 ரூபாய் வசூலிக்கப்படுகிறது.

கொரோனா காரணமாக கடந்த பல மாதங்களாக இந்த முகாம் மூடப்பட்டது. இதனால் மலை வாழ் மக்களின் உற்பத்தி பொருட்களை விற்க முடியாமல் அங்குள்ள மக்கள் தவிக்கின்றனர். அவர்களின் வாழ்வாதாரமும் கேள்விக்குறியானது.

பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை காரணமாக ஏராளமான சுற்றுலா பயணிகள் இங்கு வர வாய்ப்புள்ளது. டாப்சிலிப்பில் மீண்டும் யானை சவாரி தொடங்க வேண்டும். சுற்றுலா பயணிகளை மகிழ்விக்க வேண்டும்!

படிக்க வேண்டும்

spot_img