fbpx
Homeதலையங்கம்முதலீட்டாளர்களின் முதல் முகவரியாகுமா தமிழகம்?

முதலீட்டாளர்களின் முதல் முகவரியாகுமா தமிழகம்?

தமிழக தொழில்துறை சார்பில் ‘ முதலீட்டாளர்களின் முதல் முகவரி – தமிழ்நாடு’ என்ற முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வு முதல்வர் ஸ்டாலின் தலைமையில் வெற்றிகரமாக நடந்தேறி இருக்கிறது.

இதில் 35 திட்டங்களுக்கு புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானதோடு, 9 திட்டங்களுக்கு அடிக்கல்லும் நாட்டப்பட்டுள்ளது. 5 திட்டப்பணிகள் துவக்கப்பட்டுள்ளன.

மொத்தம் 49 திட்டங்களில் ரூ.28,508 கோடி முதலீடு, 83 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு ஆகியவையே இந்நிகழ்வின் முக்கிய சாராம்சம்.

இதனை முதல்வர் மு.க.ஸ்டாலினின் மிகப்பெரிய சாதனையாகவே தொழில்அமைப்புகள் கருதி வரவேற்றுள்ளன.

புதிய தொழில் முதலீடுகளை ஈர்ப்பதோடு பழைய தொழில்களின் வளர்ச்சிக்கும் தமிழக அரசு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்பதும் அவர்களின் கோரிக்கையாக உள்ளது.

இந்த கொரோனா பரவல் காலகட்டத்தில் இத்தனை பெரிய தொழில் முதலீடுகள் ஈர்க்கப்பட்டுள்ளது சாதாரண விஷயம் அல்ல; பெரிய விஷயம்.

கோடிக்கணக்கான ரூபாயை முதலீடு செய்ய பலரும் முன்வந்திருப்பது தமிழகத்தில் ஏற்படப்போகும் தொழிற்புரட்சிக்கு நல்ல அறிகுறி.

முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆட்சியில் தொழில் முதலீட்டாளர்களின் முதல் முகவரியாக தமிழகம் மாறும்; மாறத் தயாராகிவிட்டது என்பதே உண்மை.

படிக்க வேண்டும்

spot_img