Homeபிற செய்திகள்நீலகிரி மாவட்டத்தில் 100% தோட்டத் தொழிலாளர்கள் தடுப்பூசி செலுத்தியமைக்கு, களப்பணியாளர்களுக்குப் பாராட்டு

நீலகிரி மாவட்டத்தில் 100% தோட்டத் தொழிலாளர்கள் தடுப்பூசி செலுத்தியமைக்கு, களப்பணியாளர்களுக்குப் பாராட்டு

நீலகிரி மாவட்டம், உதகை பழங்குடியினர் பண்பாட்டு மையத்தில் நடைபெற்ற விழாவில் பழங்குடியினர் மற்றும் தேயிலை தோட்டத் தொழிலாளர்களுக்கு 100 விழுக்காடு கொரோனா தடுப்பூசி செலுத்தியமைக்காக, வனத்துறை அமைச்சர் ராமசந்திரன், மருத்துவர்கள் மற்றும் இதர மருத்துவம் சார்ந்த பணியாளர்களை பாராட்டி, சான்றிதழ்கள் மற்றும் கேடயங்களை வழங்கி கௌரவித்தார்.

உடன் மாவட்ட கண்காணிப்பு அலுவலர்/ முதன்மை செயலர், சுற்றுப்புறச்சூழல், வனம் மற்றும் தலைமை செயல் அலுவலர், இன்கோசர்வ் சுப்ரியா சாஹு, மாவட்ட கலெக்டர் இன்னசென்ட் திவ்யா, உதகை சட்டமன்ற உறுப்பினர் கணேஷ், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆஷிஷ் ராவத், மாவட்ட ஊராட்சி தலைவர் பொன்தோஸ், மாவட்ட வருவாய் அலுவலர் கீர்த்தி பிரியதர்ஷினி, துணை இயக்குநர்(சுகாதார பணிகள்) பாலுசாமி உட்பட அரசுத்துறை அலுவலர்கள் பலர் உள்ளனர்.

படிக்க வேண்டும்

spot_img