கோவை மண்டலத்துக்கு உட்பட அனைத்து பாலிடெக்னிக் கல்லூரிகளுக்கான விளையாட்டுப் போட்டியில் ஸ்ரீ ராமகிருஷ்ணா பாலிடெக்னிக் கல்லூரி முதலிடம் பெற் றது.
கோவை மண்டலத்துக்கு உட்பட்ட அனைத்து பாலிடெக்னிக் கல்லூரிகளுக்கான விளையாட்டுப் போட்டிகள் அவினாசி சாலையில் அமைந்துள்ள பிஎஸ்ஜி பாலிடெக்னிக் கல்லூரியில் நவம்பர் 1-ம் தேதி நடைபெற்றது.
இப்போட்டிகளில் துடியலூர் அருகே வட்ட மலைபாளையத்தில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா பாலிடெக்னிக் கல்லூரி அணி சதுரங்கம் மற்றும் மேசை பந்து ஆகிய இருபிரிவுகளில் கலந்து கொண்டது. இதில், சதுரங்கம் பிரிவில் முத லிடமும் மேசை பந்து பிரிவில் இரண்டாம் இடம் பிடித்து கல்லூரிக்கு பெருமை சேர்த்தனர்.
வெற்றி பெற்ற மாணவர்களை எஸ்.என்.ஆர்.சன்ஸ் அறக்கட்டளை நிறுவனங்களின் நிர்வாக அறங்காவலர் டி. லக்ஷ்மி நாராயண ஸ்வாமி, கல்லூரி முதல்வர் டாக்டர் ஆர்.என். உமா, துறைத் தலைவர்கள், விளையாட்டுத்துறை பொறுப்பாளர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் மாணவிகள் பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர்.