கோவை கே.பி.ஆர். பொறியியல் தொழில்நுட்பக் கல்லூரியின் உயிர் மருத்துவ பொறியியல் துறையின் சார்பாக பண்டைய மருத்துவ அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் என்ற சர்வதேச கருத்தரங்கு மூன்று நாட்கள் நடைபெற்றது.
கருத்தரங்கானது சித்த வேதா என்ற சர்வதேச அமைப்போடும், சமரச சுத்த சன்மார்க்க சத்திய ஆய்விருக்கை என்ற அமைப்போடும் இணை ந்து நடத்தப்பட்டது.
பண்டைய மருத்துவ அறிவியலையும், இன்¬ றய தொழில்நுட்பம் குறித்த ஆய்வுகளையும் ஒன்றிணைப்பதே இக்கருத்தரங்கின் நோக்கம்.
தஞ்சை தமிழ் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் முனைவர் சி.சுப்பிரமணியம் சிறப்புரை யாற்றினார். கோவை மேக் குழும நிறுவனங்களின் தலை வர் மனுநீதி மாணிக் கம், ஸ்டான்போர்ட் பல்கலைக் கழகத்தின் அறிவியல் அறி ஞர் முனைவர் சைலேஷ் ராவ் ஆகியோர் கௌரவ விருந்தினர்களாகக் கலந்து கொண்டனர்.
பல்வேறு மாநிலங்களிலிருந்தும், கனடா, துபாய், மலேசியா, அமெரிக்கா உள்ளிட்ட வெளி நாடுகளி லிருந்தும் உயிர் மருத்துவ பொறியியல் துறை சார்பாகவும், சித்தா அமைப்பைச் சார்ந்த நிறு வனங்கள் சார்பாகவும் கலந்து கொண்டனர்.
இக்கருத்தரங்கு அமர்வுகளில் பண்டைய மருத்துவ அறி வியல் மற்றும் நவீன உயிர் மருத்துவப் பொறியியல் சார்ந்த ஆய்வேடுகள் சமர்ப்பிக்கப்பட் டன. நிறைவு நாளில், இயக்குனர் – மருத்துவம் மற்றும் கிராமப்புற சுகாதார சேவைகள் துறை தலைவர் மருத்துவர் ஜெய.ராஜமூர்த்தி எழுதியுள்ள ‘வள் ளலாரும் பெரியாரும்’ என்ற நூல் வெளியிடப்பட்டது.
முதல்வர் முனைவர் மு.அகிலா வரவேற்றார். சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்ட சுற்றுலாத் துறை அமைச்சர் முனைவர் மதிவேந்தன் நூலின் முதல் பிரதியை வெளியிட, கல்லூ ரியின் தலைவர் டாக்டர் கே.பி.ராமசாமி பெற்றுக் கொண்டார்.
தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் முனைவர் வி. திருவள்ளுவன், வடலூர் வள்ளலாரின் கொள்ளுப் பேரன் உமாபதி வாழ்த்துரை வழங்கினர். ஆசிரியர் ஜெய. ராஜமூர்த்தி ஏற்புரை வழங் கினார். சித்த வேதா, வள்ளலார் யுனிவர்சல் மிஷன் சார்பில் சமூக சேவை மற்றும் தனித் திறன் குறித்த 36 விருதுகள் வழங்கப்பட்டன.



