fbpx
Homeபிற செய்திகள்டிசோவின் வயர்லெஸ் ஆக்டிவ் நெக்பேண்ட், வாட்ச் டி ஷார்ப் அறிமுகம்

டிசோவின் வயர்லெஸ் ஆக்டிவ் நெக்பேண்ட், வாட்ச் டி ஷார்ப் அறிமுகம்

ரியல்மி டெக்லைஃப் சுற்றுச்சூழல் அமைப்பின் கீழ் முதல் பிராண்ட் டிசோ ஆகும். இன்று இரண்டு புதிய தயாரிப்புகளை அறிமுகப்படுத்தி உள்ளது. ஒரு தனித்துவமான லேசர் பொறிக்கப்பட்ட டிசைனுடன் டிசோ வயர் லெஸ் ஆக்டிவ் நெக்பேண்ட் மற்றும் ஹை-ரெஸ், துல்லியமான டிஸ்ப்ளே, நேர்த்தியான ஹைப்ரிட் மெட்டல் பிரேம் டிசைனுடன், டிசோ வாட்ச் டி ஷார்ப்.

அதன் பயனர்களுக்கு தனித்துவமான அனுபவங்களை வழங்கும், டிசோ வயர் லெஸ் ஆக்டிவ் மற்றும் டிசோ வாட்ச் டி ஷார்ப் ஆகிய இரண்டும் டிசைன், சௌகரியம் மற்றும் தொழில்நுட்பம் ஆகியவற்றை ஒருசேர வழங்குகிறது.

டிசோ வயர்லெஸ் ஆக்டிவ், ஸ்ட்ராப்பில் ஒரு நவீன டயமண்ட் கிரிட் டிசைனையும் பட்ஸில் ஒரு நேர்த்தியான, பொறிக்கப்பட்ட அமைப்பையும் கொண்டுள்ளது.
நெக்பேண்ட் ஆனது 23 மணிநேர மியூசிக் பிளேபேக், பாஸ் பூஸ்ட்+ அல்காரிதத்துடன் 11.2மிமீ பெரிய டிரைவர் மற்றும் PU+PEEK டயபிராம் ஆகிய அம்சங்களைக் கொண்டுள்ளது.

ஸ்மார்ட்வாட்ச் விரும்பிகளுக்கு, டிசோ வாட்ச் டி ஷார்ப் ஒரு பிரீமி யம் லுக்கை அளிக்கிறது மற்றும் 1.75-அங்குலம் (4.45 செ.மீ) பெரிய மற்றும் ஹை-ரெஸ் டிஸ்ப்ளேவை 320×390 ரெசல்யூஷனுடன் வழங்குகிறது.

டிசோ இந்தியாவின் தலைமை நிர்வாக அதிகாரி அபிலாஷ் பாண்டா கூறியதாவது:
எங்களுக்கு கிடைக்கும் ஆதரவின் விளைவாக அறிமுகப்படுத்தியவை தான் டிசோ வயர்லெஸ் ஆக்டிவ், டிசோ வாட்ச் டி ஷார்ப் ஆகும்.

ஒரு புதிய நெக்பேண்ட் இயர்போன் வாங்க காத்திருப்பவர்களுக்கு, தனித் துவமான பொறிக்கப்பட்ட லேசர் டிசைன் மற்றும் நவீன அம்சங்கள் கொண்ட டிசோ வயர்லெஸ் ஆக்டிவ் ஒரு சிறந்த தேர்வு ஆகும்.

டிசோ வாட்ச் டி ஷார்ப் 86% மிருதுவான மற்றும் பிரகாசமான டிஸ்ப்ளே போன்ற அம்சங்களுடன் வருகிறது.

ஒவ்வொரு இந்திய நுகர்வோரும் ஸ்மார்ட் சாதனத்தை சொந்தமாக வைத்திருக்க வேண்டும் என்பதே எங்கள் முயற்சியாகும். இந்த இலக்கை நிறைவேற்ற பணியாற்றி வருகிறோம் என்றார்.

படிக்க வேண்டும்

spot_img