fbpx
Homeதலையங்கம்படித்த கல்விக்கூடத்துக்கு ரூ.100 கோடி நன்கொடை!

படித்த கல்விக்கூடத்துக்கு ரூ.100 கோடி நன்கொடை!

இண்டிகோ ஏர்லைன்ஸின் இணை நிறுவனரான ராகேஷ் கங்வால், தான் படித்த கான்பூர் இந்திய தொழில்நுட்பக் கழகத்திற்கு (ஐஐடி- கான்பூர்) ரூ.100 கோடி நிதியை நன்கொடை அளித்துள்ளார்.

ஐஐடி கான்பூர் தொடங்கியுள்ள மருத்துவ அறிவியல் மற்றும் தொழில்நுட்பப் பள்ளியை உருவாக்கும் திட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் ரூ.100 கோடியை அள்ளிக் கொடுத்துள்ளார்.

ராகேஷ் கங்வால் செய்தியாளர்களிடம் கூறுகையில், இதுபோன்ற உன்னதமான முயற்சியில் கல்வி நிறுவனத்துடன் இணைந்திருப்பது எனது பாக்கியம், என்று தெரிவித்து இருக்கிறார்.

பல நூறு கோடி ரூபாய்களுக்கு சொந்தக்காரரான ராகேஷ் கங்வால் ஒரு நூறு கோடியை நன்கொடை அளித்திருப்பது பெரிய விஷயம் அல்ல. அவர் கொடுத்திருப்பது தான் படித்த கல்விக்கூடத்திற்கு என்பது தான் முக்கியம்.

முன்னாள் மாணவர்கள் தாங்கள் படித்த பள்ளி அல்லது கல்லூரிகளுக்கு அங்கொன்றும் இங்கொன்றுமாக உதவி செய்வதை அவ்வப்போது அறிகிறோம்.
அது போதாது, கல்வி நிறுவனங்களுக்கு அவற்றில் படித்தவர்களும் பொதுமக்களும் உதவு வதை ஓர் இயக்கமாக மாற்ற வேண்டும்.

குறிப்பாக அரசுப் பள்ளி, கல்லூரிகளுக்கு கூடுதல் நிதியுதவி தேவைப்படுகிறது. இந்த நல்ல காரியத்துக்கு நல்ல நிலையில் இருக்கும் முன்னாள் மாணவர்கள் மட்டுமின்றி பொதுநல ஆர்வலர்களும் தங்களால் இயன்ற உதவியை செய்திட வேண்டும்.

இந்த 100 கோடி ரூபாய் நன்கொடை அதற்கு வழிகாட்டி இருக்கிறது; விழிப்புணர்வு ஏற்படுத்தி இருக்கிறது.

கல்விக் கண் திறந்த பெருந்தலைவர் காமராஜர் பிறந்த தமிழ்நாட்டிலும் அதன் தாக்கம் வெளிப்பட்டு தொடர வேண்டும்.

ராகேஷ் கங்வாலுக்கு பாராட்டும் வாழ்த்தும்!

படிக்க வேண்டும்

spot_img