சமூக விமர்சனங்களைக் கண்டு துவண்டுவிடாமல், நேர்மையாகச் செயல்பட்டால், தலைவர்களாக மாறலாம் என்று மாணவர்களுக்கு அறிவுரை வழங்கினார் கவிஞர் மரபின் மைந்தன் முத்தையா.
கேபிஆர் கலை அறிவியல் மற்றும் ஆராய்ச்சிக் கல்லூரியில் “பிரவர்த்தனா” எனும் முதலாமாண்டு மாணவர் களை வரவேற்கும் விழா நடைபெற்றது.
கல்லூரி முதல்வர் முனைவர் செ.பாலுசாமி வரவேற்றார்.
கேபிஆர் குழுமங்களின் நிறுவனர் மற்றும் தலைவர் டாக்டர் கே.பி. ராமசாமி தலைமை தாங்கி பேசுகையில், மாண வர்களை ஒழுக்கமானவர்க ளாகவும், நேர்மையானவர் களாகவும், எதிர்கால சமூகத் தலைவர்களாகவும் உருவாக்குவதே எங்கள் நிறுவனத்தின் தலையாய கல்விப்பணியாகக் கொண்டு செயல்படுகிறோம். தங்களது இலக்கை நிர்ணயித்து சரியான நேரத்தில் பணியைச் செய்வதன் வாயிலாக நீங்களும் தலைவர்களாக மாறலாம் என்றார்.
கல்லூரிச் செயலர் மற்றும் ஆலோசகர் முனைவர் எஸ்.ராமசந்திரன் வாழ்த்துரை வழங்கினார்.
நமது நம்பிக்கை இதழின் பொறுப்பாசிரியர், எழுத்தாளர் மற்றும் தன்னம்பிக்கைப் பேச்சாளர் மரபின் மைந்தன் முத்தையா சிறப்பு விருந்தினராக பங்கேற்று பேசியதாவது:
மாணவர்கள் வெற்றியா ளர்களாக உருவாவதற்கு வேண்டிய அடிப்படைப் பண்புகளைக் கல்வி வாயி லாகவே பெற முடியும். தங்களது கல்வியில் கவனம் செலுத்துவதன் வாயிலாக மாணவர்கள் சிறந்த ஆளுமைகளாகத் திகழ முடியும். சமூக விமர்சனங்களைக் கண்டு துவண்டுவிடாமல் நேர்மையாகச் செயல்பட்டால், கேபிஆர் கனவுத் தலைவர் களாக நீங்கள் மாறலாம் என்றார்.
மேலாண்மைத்துறைப் புலமுதன்மையர் முனைவர் பி.ஷியாம்சுந்தர் நன்றி கூறி னார். கல்லூரி துறைசார் புல முதன்மையர்கள், துறைத்தலைவர்கள், பேராசி ரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் என 2500க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.



