நீலகிரி மாவட்டம் கூடலூர் வண்டிபேட்டை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் நடைபெற்ற மாபெரும் கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாமினை மாவட்ட கலெக்டர் இன்னசென்ட் திவ்யா நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
உடன் கூடலூர் வருவாய் கோட்டாட்சியர் சரவணகண்ணன், துணை இயக்குநர் (சுகாதார பணிகள்) பாலுசாமி உட்பட அரசுத் துறை அலுவலர்கள் பலர் உள்ளனர்.



