Homeதலையங்கம்நல்ல ஒப்பந்தம்!

நல்ல ஒப்பந்தம்!

ஓய்வூதியதாரர்களின் வீடுகளுக்கே சென்று வாழ்நாள் சான்றிதழ் பெறும் வகையில் தமிழக அரசு தபால் துறை வங்கியுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து கொண்டுள்ள திட்டம் பாராட்டி வரவேற்கத்தக்கது.

ஓய்வூதியம், குடும்ப ஓய்வூதியம் பெறுவோரின் வயதினை கருத்தில் கொண்டு அவர்கள் நேரில் வருவதில் ஏற்படும் இடர்பாடுகளை தவிர்க்கும் பொருட்டு தபால் துறை வங்கி மூலம் ஓய்வூதியர்களின் இருப்பிடத்திற்கே சென்று ஜீவன் பிரமான் இணையத்தின் வழியாக மின்னணு வாழ்நாள் சான்றிதழை பெற தமிழக அரசு தபால் துறை வங்கியுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது பாராட்டி வரவேற்கத்தக்கது.

மின்னணு வாழ்நாள் சான்றிதழுக்கு ஒரு நபருக்கு ரூபாய் 70 என கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் சென்னை தலைமை செயலகத்தில் தமிழக நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் முன்னிலையில் கையெழுத்தானது.

இத்திட்டம் பாராட்டி வரவேற்கத்தக்கது.

படிக்க வேண்டும்

spot_img