Homeபிற செய்திகள்நகர்ப்புறங்களில் காடு வளர்ப்பு

நகர்ப்புறங்களில் காடு வளர்ப்பு

ஜி.ஆர்.ஜி. அறக்கட் டளையின் கீழ் செய ல்பட்டு வருகிற, கோவை பிஎஸ்ஜிஆர் கிருஷ்ணம் மாள் மகளிர் கல்லூரி பேராசிரியர்களையும் மாணவர்களையும் சமுதாய தொழில்நுட்பம் மற்றும் இயற்கை மேம் பாடு குறித்து விழிப் புணர்வு அடைய ஏராள மான திட்டங்களை ஊக்குவிப்பதோடு நிதி உதவியும் அளித்து வருகி றது.

நிலை தன்மையான சுற்றுச்சூழலை நோக்கி: நகர்ப்புற காடு வளர்ப்பின் மூலம் வெளிப்புற இயற் கை வகுப்பறை உரு வாக்குதல்(Towards Eco Sustainability: Creating Outdoor Nature Classroom through Urban Forestation) என்ற திட்டத்தின் கீழ் சேரன் மாநகர் அப்பாச்சி கார் டன் இருப்பு இடத்தில் (reserve site) மரக்கன்று நடும்விழா நடைபெற்றது.

இதில், கல்விசார் பாதுகாப்பு மற்றும் முன் னாள் மாணவர்கள் புல முதன்மையர் முனைவர் ஆர்.பத்மாவதி, ஆங்கிலத் துறை உதவிப் பேராசிரியை ஆர்.கனகலதா, மகளிர் மேம்பாடு மற்றும் தொழில் நுட்பவியல் பூங்கா ஒருங் கிணைப்பாளர் முனைவர் அ.அகிலா முனைவர். டி.தமிழ்ச்செல்வி, முனை வர் கே. சுகுணா, முன் னாள் மாணவர்கள் அமைப்பு, அரிமா சங் கம் கோவை டைடல் சிட்டி, கவுன்சிலர் சரஸ்வதி, ஜி-18 மற்றும் பேராசிரியர்கள், மாணவர் கள் சமூக ஆர்வலர்கள் கலந்து கொண்டு சிறப் பித்தனர்.

நகர்ப்புறகாடு வளர்ப்பு மூலம், மக்களி டையே இயற்கை விழிப்புணர்வையும், குழந்தைகள் மற்றும் பெரியவர்களிடையே இயற்கை சூழலில் நாம் புத்தகம் வாசிக்கும்போது ஏற்படும் மனம் மற்றும் உடல் நல மேம்பாடு பற்றிய விழிப்புணர்வையும் கொண்டு செல்வதே இத் திட்டத்தின் நோக்கமா கும்.

குழந்தைகள் முதல் பெரியோர்கள் வரை விழிப்புணர்வினை கொண்டு சென்ற இந்நி கழ்வினை கல்லூரி நிர் வாக தலைவர் டாக்டர் ஆர்.நந்தினி, கல்லூரி செயலாளர் முனைவர் நா.யசோதாதேவி, கல்லூரி முதல்வர் முனைவர் ச.நிர் மலா ஆகியோர் பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர்.

படிக்க வேண்டும்

spot_img