fbpx
Homeபிற செய்திகள்ஈரோடு கொங்கு கல்வி நிலையம் பள்ளி மாணவ, மாணவிகள் மாநில அளவில் சிறப்பு மதிப்பெண் பெற்று...

ஈரோடு கொங்கு கல்வி நிலையம் பள்ளி மாணவ, மாணவிகள் மாநில அளவில் சிறப்பு மதிப்பெண் பெற்று சாதனை

ஈரோடு ரங்கம்பாளை யம் கொங்கு கல்வி நிலையம் மெட்ரிக் மேல் நிலைப்பள்ளியில் 2021-2022ம் கல்வி ஆண்டில் பிளஸ் 2 மற்றும் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு படித்த மாணவ, மாணவிகள் மாநில அளவில் சிறந்த மதிப்பெண்கள் பெற்று, 100 சதவீதம் தேர்ச்சி பெற் றுள்ளனர்.

12-ம் வகுப்பு பொதுத் தேர்வில் 600-க்கு 595 மதிப் பெண்கள் பெற்று எஸ்.கே.சமிதா முதலிடமும், 592 மதிப்பெண்களுடன் டி.எம். குருவிஷால் இரண்டாமிடமும், 590 மதிப்பெண்களுடன் எம்.ஜோதிரூபன், ஜெ. தருண் ஆகிய இருவரும் மூன்றாமிடமும் பிடித்து சாதனை படைத்தனர்.

12-ம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதிய 319 மாணவ, மாணவிகளில் 550க்கு மேல் 49 பேரும், 500க்கு மேல் 134 பேரும் பெற்றுள்ளனர். 10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் 500க்கு 496 மதிப்பெண்கள் எடுத்து கே.தனிஷ்கா முதலிடமும், 495 மதிப்பெண்களுடன் அனுஷ்கா த்ரிவேதி இரண்டாமிடமும், 492 மதிப்பெண்களுடன் எஸ்.கவிநிலா மூன்றாமிடமும் பிடித்தனர்.

10ம் வகுப்பு தேர்வு எழுதிய 248 மாணவர்களில், 450 மதிப் பெண்களுக்கு மேல் 51 பேரும், 400க்கு மேல் 122 பேரும், பாட வாரியாக கணித பாடத்தில் 7 பேரும், அறிவியல் பாடத்தில் 7 பேரும், சமூக அறிவியல் பாடத்தில் 3 பேர் என மொத்தம் 17 பேர் 100க்கு 100 மதிப்பெண்கள் பெற் றுள்ளனர்.

பிளஸ் 2, 10ம் வகுப்பு பொதுத்தேர்வில் மாநில அளவிலும், பள்ளியிலும் முதல் மூன்று சாதனை மதிப்பெண் பெற்ற மா ணவ- மாணவிகளுக்கு பாராட்டு விழா கொங்கு கல்வி நிலையம் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி வளா கத்தில் பாராட்டு விழா நடந்தது.

பள்ளி அறக்கட்டளைத் தலை வர் எம்.சின்னசாமி, செயலாளர் கே.செல்வராஜ், பொருளா ளர் குணசேகரன் ஆகி யோர் மாணவர்களை பாராட்டி, நினைவுப் பரி சினை வழங்கினர்.

முதல் மதிப்பெண் எடுத்தவர்களுக்கு ரூ.25 ஆயிரமும், இரண்டாம் இடம் பிடித்தவர்களுக்கு ரூ.15 ஆயிரமும், மூன்றா மிடம் பிடித்தவர் களுக்கு ரூ.10 ஆயிரம் ரொக்கப் பரிசும் வழங்கப்பட்டது.

100 சதவீதம் தேர்ச்சி பெற்று தந்த முதல்வர் நதியா, ஆசிரியர்கள், பள்ளி நிர்வாகிகளான சோம சுந்தரம், மீனாட்சி சுந்தரம், தெய்வசிகாமணி, நாகராஜ், உறுப்பினர் ரவிச்சந்திரன் ஆகியோரை பாராட்டி நன்றி தெரிவித்தனர்.

படிக்க வேண்டும்

spot_img