திண்டுக்கல் புனித வளனார் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் 66 வது விளையாட்டு விழா நடைபெற்றது. பள்ளி தலைமை ஆசிரியர் ராஜேஸ்வரி தலைமை வகித்தார். பள்ளி தாளாளர் ஜெயராணி முன்னிலை வகித்தார்.
திண்டுக்கல் டி.எஸ்.பி. கோகுல கிருஷ்ணன், டாக்டர் அமலா தேவி, புனித வளனார் பெண்கள் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் ஷோபியா வாழ்த்துரை வழங்கினர். சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட மேயர் இளமதி, துணை மேயர் ராஜப்பா விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பரிசு வழங்கினர்.
துணை மேயர் ராஜப்பா பேசியதாவது: மாணவர்கள் நன்றாக படிப்பதுடன் விளையாட்டிலும் திறமையை மேம்படுத்திக் கொள்ள வேண்டும். விளையாட்டுக்காக நமது முதல்வர் தனிக் கவனம் செலுத்தி வீரர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கி வருகிறார். ஒவ்வொரு மாணவிகளும் திறமையை வெளிப்படுத்த வேண்டும்.
போட்டியில் வெற்றி பெற்ற, வெற்றி பெற முயற்சித்த அனைவருக்கும் எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அவர் பேசினார்.
நிகழ்ச்சியில் மாணவிகளின் அணிவகுப்பு மற்றும் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றது. இதில் மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.



