பெரியார் பல்கலைக்கழகக் கல்லூரிகளுக்கு இடை யேயான கைப்பந்துப் போட்டிகள் சேலம், ஏ.வி.எஸ். கல்லூரியில் நடைபெற்றன.
சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, நாமக்கல் மாவட்டங் களைச் சேர்ந்த 38 அணிகள் இப்போட்டிகளில் பங்கு பெற்றன. இதன் அரை இறுதிச்சுற்றில் தருமபுரி, தொன் போஸ்கோ கல்லூரி அணி, சேலம் கணேஷ் கல்லூரி அணி மோதியது. இதில் 5-/4 என்ற புள்ளிக்கணக்கில் தருமபுரி, தொன் போஸ்கோ கல்லூரி அணி வெற்றி பெற்று இறுதிச்சுற்றுக்கு முன்னேறியது.
இறுதிச்சுற்றில் தருமபுரி தொன் போஸ்கோ கல்லூரி
இறுதிச்சுற்றில் தருமபுரி தொன் போஸ்கோ கல்லூரி அணியுடன், சேலம் ஏ.வி.எஸ். கல்லூரி அணி மோதியது. இதில் 5-/3 என்ற புள்ளிக்கணக்கில் சேலம் அணி வென்றது. தருமபுரி, தொன் போஸ்கோ கல்லூரி அணி இரண்டாம் இடம் பிடித்தது.
வெற்றி பெற்ற மாணவர்கள் மற்றும் உடற்கல்வி இயக்குநர் பேராசிரியர் ம.சேவியர் டெனிஸ் ஆகியோரைக் கல்லூரிச் செயலர் அருட்தந்தை முனைவர் எட்வின் ஜார்ஜ், முதல்வர் அருட்தந்தை முனைவர் ஆஞ்சலோ ஜோசப், துணை முதல்வர் அருட்தந்தை முனைவர் பாரதி பெர்னாட்ஷா, பொருளாளர் அருட்தந்தை ஜான், சமூகப்பணித்துறைப் பேராசிரியர் அருட்தந்தை ஆண்டனி கிஷோர் மற்றும் பேராசிரியர்கள் பாராட்டினர்.



