Homeதலையங்கம்தமிழுக்கு சோதனை - அலட்சியம் கூடாது!

தமிழுக்கு சோதனை – அலட்சியம் கூடாது!

சமீபத்தில் 10 ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது. அதில் 47 ஆயிரம் மாணவர்கள் தமிழ்ப் பாடத்தில் தோல்வி அடைந்தனர் என்பது, அதிர்ச்சி தரும் -வேதனைச் செய்தியாகும்.

இதற்காக ஒரு குழு அமைத்து, உண்மைக் காரணத்தைக் கண்டறிந்து தீர்வு காணவேண்டியது மிக அவசியமான ஒன்றாகும்.

தமிழ்நாட்டில் தாய்மொழிக் கல்வியில் தமிழ்நாட்டு மாணவர்களின் நிலை இந்த அளவுக்கு பின்னோக்கி இருப்பதை அலட்சியப்படுத்த முடியாது.

இதன் மீது கவனம் செலுத்தாவிட்டால் தமிழர்களின் வாழ்க்கைப் பண்பாட்டுப் பயணத்தில் மிகப்பெரிய வீழ்ச்சியை ஏற்படுத்தி விடும் என்பதில் ஐயமில்லை. இதன் காரணத்தைக் கண்டறிந்து, குறைபாட்டை உடனடியாக நீக்கவேண்டியது தமிழக அரசின் அவசியமான கடமையாக மாறி இருக்கிறது.

தேவையான தமிழாசிரியர்களை நியமனம் செய்து, தாய்மொழியான தமிழின்மீது மாணவர்களுக்கு ஆர் வத்தையும், அக்கறையையும் ஏற்படுத்த வேண்டியது – தமிழக அரசின் கடமையாகும்.

தமிழைப் பயிற்று மொழியாகக் கொண்ட வர்களுக்கு 20 விழுக்காடு இட ஒதுக்கீடு அளிக்கும் தமிழ்நாடு அரசு, இந்த விஷயத்திலும் உடனடியாக கவனம் செலுத்தும் என்பதில் ஐயமில்லை.

அரசு தன் கடமையைச் செய்தாலும் தமிழ் அமைப்பு களும், இலக்கிய அமைப்புகளும் தனிக்கவனம் செலுத்தி, ஆக்கப் பூர்வமான பிரச்சாரங்களை முன்னெடுக்க வேண்டும்.

ஆங்கிலத்தைப் பயிற்று மொழியாகக் கொண்டு படிக்கும் தமிழர் வீட்டுப் பிள்ளைகள் மொழிப் பாடமாகத் தமிழை எடுத்துக் கவனமுடன் படிக்க வேண்டும். எந்த நிலையிலும் நமது தாய்மொழி தமிழ் என்பதை மறந்துவிடக் கூடாது. இதில் பெற்றோரும் முக்கிய கவனம் எடுத்துக்கொள்ளவேண்டும்.

வரும் கல்வியாண்டுப் பொதுத் தேர்வில் தற்போதைய நிலை தொடராமல் தமிழ்ப்பாடத்தில் தோல்வி அடைவோர் எண்ணிக்கை மிகமிகக் குறைய வேண்டும்.

தமிழக அரசின் நடவடிக்கைகளால் அது நிச்சயம் நடக்கும்; நடக்க வேண்டும்.
தமிழ் வாழ்க! வளர்க!!

படிக்க வேண்டும்

spot_img