65 ஆண்டுகளுக்கும் அதிகமாக சமூக சேவையில் ஈடுபட்டுவரும் இந்தியாவின் முதல் ரவுண்டு டேபிள் அமைப்பு என்ற பெருமையினைக் கொண்டிருக்கும் மெட்ராஸ் ரவுண்டு டேபிள் 1 (MRT 1), சென்னையில் டிசம்பர் 11-ம் தேதி அறச்செயல் நோக்கத்திற்காக ‘சென்னை ரன்ஸ்’ என்ற பெயரில் மாரத்தான் நிகழ்வை ஏற்பாடு செய்து நடத்தவிருக்கிறது.
குழந்தை பருவ புற்றுநோய் மீதான விழிப்புணர்வை உருவாக்குதல், நோய்ப்பாதிப்பை கண்டறிதல் மற்றும் சிகிச்சையளித்தல் என்ற குறிக்கோள்களுக்காக இயங்கும் அரசு சாரா தொண்டு நிறுவனமான மகேஷ் மெமோரியல் டிரஸ்ட்-ன் ஒத்துழைப்போடு குழந்தைகளுக்கான புற்று நோய் நேர்வுகளுக்கு சிகிச்சையளிக்க நிதி திரட்டும் நோக்கத்துடன் இந்த மாரத்தான் நிகழ்வு நடத்தப்படுகிறது.
கண் கண்ணாடிகள் மற்றும் கண்ணாடிகளுக்கான லென்ஸ்கள் துறையில் இயங்கிவரும் சர்வதேச அளவில் முதன்மை வகிக்கும் தொழில்நுட்ப பெருநிறுவனமான ஸைஸ் (Ziess), இந்தியாவில் கண் மருத்துவமனைகளின் முன்னணி வலையமைப்பு குழுமங்களுள் ஒன்றான டாக்டர் அகர்வால்ஸ் கண் மருத்துவமனை, வசந்த் அண்ட் கோ, கல்யாண் ஜூவல்லர்ஸ், கோஷ் சொகுசு ரிசார்ட்ஸ், கேகேஎன் எனர்ஜி, அப்போலோ ஹெல்த்கேர், ஐடி ஃப்ரெஷ் ஃபுட், கோகோ கோலா இந்தியா ஆகிய நிறுவனங்களின் ஆதரவோடு அறச்செயல் பாட்டுக்கான இம்மா ரத்தான் நிகழ்வு நடை பெறுகிறது.
‘சென்னை ரன்ஸ்’ என்ற பெயரில் முதல் பதிப்பாக நடைபெறும் இம்மாரத்தான் நிகழ்வு, பெசன்ட் நகரிலுள்ள ஆல் காட் நினைவு உயர்நிலைப் பள்ளி மைதானத்திலிருந்து ஆரம்பமாகும். பொதுமக்கள், மாணவர்கள், மற்றும் கார்ப்பரேட் பணியாளர்கள் என அனைவரும் பங்கேற்கக்கூடியவாறு 3 கிமீ, 5 கிமீ, 10 கிமீ மற்றும் 21 கிமீ வகையினங்களின் கீழ் இம்மாரத்தான் நிகழ்வுகள் நடத்தப்படுகின்றன.
திறனிழப்பு இருப்பினும் சேம்பியன்களாக திகழும் மாற்றுத்திறனாளிகளும் இந்நிகழ்வில் ஓடலாம். நவம்பர் 25-ம் தேதி வரை <www.chennairuns.com வலைதளத்தில் ஆன்லைன் முறையில் இதில் பங்கேற்பதற்கு பதிவு செய்யலாம்.
மெட்ராஸ் ரவுண்டு டேபிள் 1
மெட்ராஸ் ரவுண்டு டேபிள் 1-ன் (MRT1), , தலைவர், டாக்டர் அஸ்வின் அகர்வால் கூறியதாவது: இந்நிகழ்வின் மூலம் திரட்டப்படும் அனைத்து அன்பளிப்புகளும், பங்களிப்புகளும், புற்றுநோய் மீதான விழிப்புணர்வை அதிகரிப்பது, சிகிச்சைக்கான செலவுகளை எதிர்கொள்வது மற்றும் புற்றுநோய் பாதிப்புக்கான சாத்தியமுள்ள நபர்களுக்கு தொடக்க நிலை பரிசோதனையை மேற்கொள்வது ஆகிய குறிக்கோள்களுக்கான செயல்பாடுகளுக்கு செலவிடப்படும் என்றார்.
மெட்ராஸ் ரவுண்டு டேபிள் 1-ன் (MRT1), நிதி திரட்டல் குழுவின் அமைப் பாளர் சிராக் குப்தா பேசுகையில், “இந்நிகழ்வின் மூலம் திரட்டப்படும் நிதி, புற்றுநோய் மீது பொதுமக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் நிகழ்வுகளை அதிகரிக்கவும் மற்றும் புற்று நோயாளிகளுக்கு, குறிப்பாக பொருளாதார ரீதியில் ஏழ்மையான பின்னணியை கொண்டவர்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சை ஆகியவற்றை இன்னும் விரிவுபடுத்தவும் உதவும் என்று நம்புகிறோம்,” என்றார்.
13 ஆண்டுகளாக புற்றுநோயை எதிர்த்துப் போராடி 2002 அக்டோபர் மாதத்தில் உயிரிழந்தவரும் மற்றும் மக்களால் அதிகம் மதிக்கப்பட்ட இசையமைப்பாளருமான மகேஷ் மகாதேவன் நினைவை போற்றும் வகையில் இந்த டிரஸ்ட் நிறுவப்பட்டது.