fbpx
Homeபிற செய்திகள்ஜே.எஸ்.எஸ். கல்லூரியில் மனிதன்- விலங்குகள் உறவு விழிப்புணர்வு வார விழா

ஜே.எஸ்.எஸ். கல்லூரியில் மனிதன்- விலங்குகள் உறவு விழிப்புணர்வு வார விழா

ஜே.எஸ்.எஸ். கல்லூரியில் மனித விலங்குகள் உறவு விழிப்புணர்வு வாரவிழா கொண்டாடப்பட்டது. ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 2-வது வாரத்தில் மனித விலங்குகள் உறவு விழிப்புணர்வு வாரம் கொண்டாடப்படும்.

உதகையில் உள்ள ஜே.எஸ்.எஸ். மருந்தியல் கல்லூரியின் மருந்தியல் துறை மற்றும் இந்திய மருந்தியல் சங்கம், நீலகிரி உள்ளூர் கிளை ஆகியவை இணைந்து இந்நிகழ்வுக்கு ஏற்பாடு செய்திருந்தன.

மருந்தியல் துறை பேராசிரியர் மற்றும் துறைத் தலைவர் பிரவீன் வரவேற்றார். பேராசிரியர் டாக்டர் பி.ஆர்.ஆனந்த் விஜயகுமார் பேசினார்.

விலங்கு மனித உறவுகள் மேம்படுவதில் மனிதனின் பங்கு

ஆய்வக விலங்குகளை கையாளும் நுட்பம் நெறிமுறைகள் மற்றும் உரிமைகள், விலங்குகள் சோதனை, விலங்கு மனித உறவுகள் மேம்படுவதில் மனிதனின் பங்கு என்ற தலைப்பில் விவாதம், மின் வரைகலை சுவரொட்டி தயாரித்தல் மற்றும் கட் டுரைப் போட்டி போன்ற பல்வேறு நிகழ்ச்சிகள் நடந்தன.

பேராசிரியர் மற்றும் இந்திய மருந்து சங்கம், நீலகிரி வட்டார கிளைத் தலைவர் டாக்டர் ஆர்.வடிவேலன் நன்றி கூறினார்.

படிக்க வேண்டும்

spot_img