பெரம்பலூர் மாவட்டம், லெப்பைக்குடிக்காடு பேரூராட்சியில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி குறித்து
மாணவிகளிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மாண்புமிகு போக்குரத்துத் துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் விழிப்புணர்வு பேரணி, செஸ் போட்டி மற்றும் மாதிரி செஸ் வடிவ போட்டிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் ஸ்ரீ வெங்கடபிரியா, மாவட்ட ஊராட்சிக்குழுத் தலைவர் சி.ராஜேந்திரன் ஆகியோர் முன்னிலையில் நேற்று துவக்கி வைத்து பார்வையிட்டார்.
இந்நிகழ்ச்சியில் பெரம்பலூர் கோட்டாட்சியர் நிறைமதி, மாவட்ட ஊராட்சிக்குழு துணைத்தலைவர் முத்தமிழ்ச்செல்வி மதியழகன், வேப்பூர் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் பிரபா செல்லப்பிள்ளை, லெப்பைக்குடிக்காடு பேரூராட்சித் தலைவர் ஜாகிர் உசேன். துணைத்தலைவர் ரசூல், செயல் அலுவலர் சதீஸ்குமார், மாவட்ட முதன்மை கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர் முத்துக்குமார், உள்ளிட்ட அனைத்து துறை அலுவலர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.



