கட்டண உயர்வு குறித்த பயணிகளின் தொடர் புகாரை தொடர்ந்து சிறப்பு ரயில் நடைமுறையை கைவிடவும் கொரோனா பேரிடருக்கு முந்தைய பழைய கட்டண முறையை அறிமுகப்படுத்தவும் ரயில்வே சார்பில் நேற்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மூத்த ரயில்வே அதிகாரி ஒருவர் கூறுகையில், பழைய கட்டண நடைமுறையில் ரயில்களை இயக்க ரயில்வே மண்டலங்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளன.
உடனடியாக இந்த உத்தரவை நடைமுறைப்படுத்துமாறு ரயில்வே வாரியம் கேட்டுக்கொண்டுள்ளது. எனவே இந்த உத்தரவை நடைமுறைப்படுத்த ஒன்று அல்லது இரண்டு நாட்கள் ஆகலாம் என்று மூத்த ரயில்வே அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
எனவே சிறப்பு ரயில் நடைமுறை ரத்து செய்யப்படுகிறது. விரைவில் பழைய ரயில் கட்டணம் நடைமுறைப்படுத்தப்படும்.



