கே.பி.ஆர்.பொறியியல் மற்றும் தொழில் நுட்பக் கல்லூரி, கோவை எக்கி பம்ப்ஸ் நிறுவனத்துடன் இணைந்து, கே.பி.ஆர் வளாகத்தில் எக்கி-கேபிஆர்இடி- சர்வதேச நீர் தொழில்நுட்ப மையத்தை நிறுவியது.
கே.பி.ஆர். கல்லூரி முதல்வர் முனைவர் எம்.அகிலா வரவேற்றார். சிறப்பு விருந்தினராக பங்கேற்ற ஜெர்மன் கன்சல் ஜெனரல் கரின்ஸ் டோல் பேசும்போது, தொழில் மற்றும் கல்வி நிறுவனங்கள் இடையே ஏற்படும் இந்த உறவு பொறியியல் துறையின் வளர்ச்சிக்கு பேருதவியாக இருக்கும்.
இது சிறந்த வேலைவாய்ப்பை உருவாக்குவது மட்டுமல்லாமல் தரமான உற்பத்தியையும் கொடுக் கும். இது ஜெர்மன் நாட்டில் உள்ளது போல் கற்றலையும் மற்றும் செயல்முறை இரண்டையும் ஒருங் கிணைத்து வழங்கும் என்றார்.
கே.பி.ஆர்.கல்லூரியின் குழுமங்களின் தலைவர் டாக்டர் கே.பி.ராமசாமி, பேசும்போது, கல்லூரியில் நிறுவப்பட்ட இந்த புதிய நீர் தொழில்நுட்ப மையத் தில் கல்லூரியின் 45-க்கும் மேற் பட்ட ஆராய்ச்சியாளர்கள் மற்றும் கல்வியாளர்களும் எக்கி நிறுவனத்தின் சார்பாக 40-க்கும் மேற்பட்ட பொறியாளர்கள் இ¬ ணந்து ஓன்றுபட்ட நிபுணத்துவத்தை உருவாக்க இருக்கிறார்கள்.
ஆரம்பத்தில் இந்த புதிய மையம் நீர் தொழில்நுட்பத்தில் எஸ்.கே.இ. எனப்படும் திறன் பயிற்சி அறிவு பரிமாற்றம் மற்றும் தொழில் முனைவோர் ஊக்குவித்தல் மூலம் தனது செயல்பாடுகளை துவக்க திட்டமிட்டுள்ளது என்றார்.
எக்கி நிறுவனத்தின் முதன்மை செயல் அதிகாரி பி.ஆறுமுகம் பேசுகையில், மாணவர்களின் நடை முறை அறிவை மேம்படுத்துதல், தன்னம்பிக்கையை மேம்படுத்துதல், அவர்களின் திறன்களை மேம்படுத்துவதற்கான வாய்ப்புகள் மற்றும் நீர் தேவைகளின் தற்போதைய மற் றும் எதிர்கால நிலைகள் மிகவும் அச்சுறுத்தும் வகையில் உள்ளது.
எனவே நீர் தொழில் நுட்பம் மூலம் தீர்வு காண்பதே தற்போதைய சிறந்த உத்தி ஆகும் என்றார். கே.பி.ஆர். குழுமங்களின் செயல் இயக்குனர் டி.என்.அருண், கல்லூரி தலைமை நிர்வாக அதிகாரி முனை வர் ஏ.எம்.நடராஜன், எக்கி பம்ப்ஸ் இணை தலைமை நிர்வாக அதிகாரி கனிஷ்கா ஆறுமுகம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.



