fbpx
Homeதலையங்கம்சலிப்படையாமல் கடைபிடியுங்கள்

சலிப்படையாமல் கடைபிடியுங்கள்

தடுப்பூசி போடுவதை பரவலாக்கி, அமைச்சர்கள், மருத்துவர்கள், முன்கள பணியாளர்கள், அதிகாரிகள் அனைவரும் ஒன்று சேர்ந்து தங்கள் உயிரையும் பொருட்படுத்தாமல் உழைத்ததற்கான பலனாக கொரோனாவின் தீவிரம் குறைய ஆரம்பித்திருக்கிறது.

இந்த தளர்வுகள் கொடுக்கப்பட்டிருப்பதற்கு காரணம், சாமானிய மக்களின் பொருளாதாரம் தினசரி நடவடிக்கைகள் பாதிக்கப்படக் கூடாது என்ற அக்கறை தான் என்பதை புரிந்து நடக்க வேண்டும்.

மூன்றாவது அலை விரைவில் வரும் என்ற எச்சரிக்கையால் முதல் இரண்டு அலைகள் முற்றிலும் ஒழிந்துவிட்டதாக அர்த்தமில்லை.

அவையும் பதுங்கி இருக்கின்றன. அவற்றுடன் சேர்ந்து மூன்றாவது அலையும் வரலாம் என்று தான் அர்த்தம்.

இந்த புரிதலோடு தளர்வுகளை தாறுமாறாக மீறுகிற பொதுமக்கள் கொஞ்சம் அடக்கி வாசிக்க வேண்டும் என்பது தான் இப்போது மிகவும் முக்கியம்.

தடுப்பூசி போட்டுக் கொள்ளுதல், தனிமனித இடைவெளியை கடைபிடித்தல், முகக்கவசம் அணிதல், சோப்பு போட்டு கைகளை கழுவுதல் போன்ற அத்தியாவசிய செயல்களை அனைவரும் சலிப்படையாமல் ஒரு கடமையாக இயந்திரத்தனமாக கடைபிடித்தால் மட்டுமே கொரோனா முற்றிலும் ஒழியும் என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.

படிக்க வேண்டும்

spot_img