கோவை மலுமிச்சம் பட்டியில் உள்ள குட் ஷெப்பர்ட் செமினரி நல்ல ஆயன் குருகுல கல்லூரி 13 ம் வருட மாணவர்கள், 8 பாதிரியார்கள் மற்றும் பேராசிரியர் அருட் தந்தை அண்டனி ராஜ் ஆகியோர் சமய நல்லிணக்க சந்திப்பிற்காக கோவை கரும்பு கடையில் உள்ள இஹ்ஸான் பள்ளி வாசலுக்கு நேற்று வருகை புரிந்தனர்.
மதியம் பள்ளிவாசல் நிர்வாகிகளும் ஜமாத்தே இஸ்லாமி ஹிந்த் கோ வை மாநகர தலைவர் பி.எஸ்.உமர் பாரூக், அழைப்பியல் செயலாளர் ஆசிக், செயலாளர்கள் அப்துல் ஹக்கீம், சபீர் அலி ஆகியோருடன் கலந்துரையாடினார்கள்.
அவர்கள் இஸ்லாமிய மார்க்கம் பற்றியும் வழிபாட்டு முறைகள் பற்றியும் அமைதி, நல்லிணக்கம், பரஸ்பர புரிந்துணர்வு போன்ற தலைப்புகளில் பல்வேறு கேள்விகள் கேட்கப்பட்டு அதற்கான பதில்கள் அளிக்கப்பட்டன.
இரு தரப்பினரும் தங்களது அன்பையும் நட்பையும் பரஸ்பரம் பரிமாறிக் கொண்டனர். நமது நாட்டின் ஒற்றுமைக் கும் வலிமைக்கும் இது போன்ற சந்திப்புகள் மிகவும் அவசியமான ஒன்று. இஸ்லாமிய புத்தகங்கள் அன்பளிப்பாக வழங்கப்பட்டது.
பள்ளிவாசலுக்கு வருகை தருவதற்கு முன்பாக இக்குழுவினர் குருத்துவாரா, ஜெயின் கோயில், மற்றும் பேரூர் கோயில் ஆகிய வழிபாட்டு தலங்களுக்கும் விஜயம் செய்திருந்தனர்.
இனிவரும் காலங்களில் நம் கோவை நகரில் சர்வமத தலைவர்களும் இணைந்து நல்லிணக்க பணிகளை மேற்கொள்வது என முடிவு செய்யப்பட்டதாக கோவை ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் செயலாளர் அப்துல் ஹக்கீம் தெரிவித்தார்.



