கோவை ரேஸ்கோர்ஸ் உடல் நடைபயிற்சி செய்வோர் கழகம் சார்பில் நடைபெற்ற 75 – வது சுதந்திர தினவிழாவில் வருமானவரி ஆணையாளர் டாக்டர் எஸ்.சுந்தரேசன் தேசிய கொடி ஏற்றினார். விழாவுக்கு நடைபயிர்ச்சி செய்வோர் கழக தலைவர் ஆர்.சி.ராமசாமி தலைமை தாங்கினார்.
சிறப்பு விருந்தினராக மூத்த வழக்கறிஞர் எலைட் அரிமா சங்க தலைவர் ஏ.ராஜேஷ்கண்ணா கலந்துகொண்டு மரக்கன்றுகள் வழங்கி பேசினார். விழாவில் கோவை ரேஸ்கோர்ஸ் சி.எஸ்.ஐ. பாதிரியார் என்.சார்லஸ் சாம்ராஜ், டாக்டர் பரமேசுவரன் ஆகியோர் கலந்துகொண்டனர்.



