fbpx
Homeபிற செய்திகள்கோவையில் ‘கொலு பொம்மைகள்’ கண்காட்சி

கோவையில் ‘கொலு பொம்மைகள்’ கண்காட்சி

கோவை மாவட்டம், பூம்புகார் விற்பனை நிலையத்தில், நேற்று (செப்.21) ‘கொலுபொம்மைகள்’ சிறப்பு கண்காட்சி மற்றும் விற்பனையை, மாவட்ட ஆட்சியர் டாக்டர் ஜி.எஸ்.சமீரன் துவக்கி வைத்து பார்வையிட்டார்.

பின்னர் மாவட்ட ஆட்சியர் தெரிவித்தாவது:
கைவினைப்பொருட்கள் உலகில் தனி இடத்தைப் பிடித்துள்ள பூம்புகார் என்ற பெயரால் அனைவராலும் அறியப்படும் ,தமிழ்நாடு கைத்திறத் தொழில்கள் வளர்ச்சிக்கழகம், 1973-ல் துவக்கப்பட்டது.

தொண்மையான கலைகளை பாதுகாப்பதோடு கைவினைஞர்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதை, நோக்கமாகக் கொண்டு செயல்பட்டு வருகிறது.

ஒவ்வொரு ஆண்டும் பண்டிகைக் காலங்களில் பல கண்காட்சிகளை நடத்தி வருவதைப்போல ,இந்த ஆண்டும் நவராத்திரி பண்டிகையை முன்னிட்டு ‘கொலு பொம்மைகள்’ என்ற பெயரில் சிறப்பு கண்காட்சி மற்றும் விற்பனையைத் துவக்கி உள்ளது.

வரும் அக்டோபர் 20-ம் தேதி வரை தினசரி காலை 10 மணி முதல் இரவு 80 மணி முடிய பூம்புகார் விற்பனை நிலையம், 1239 பெரிய கடைவீதி ஆகிய இடங்களில் நடைபெறஉள்ளது.

இக்கண்காட்சியில் தசாவதாரம் செட், விநாயகர் செட், அத்திவரதர், தர்பார் செட், அஷ்டலட்சுமி செட், மும்மூர்த்தி செட், கிரிவலம் செட்,கருடா சேவை செட், திருப்பதி செட், குபேரன் செட், வைகுண்டம் செட், மைசூர்தசர செட்,எலிநடன செட், வாசு தேவர் செட், கோபியர் செட், வளைகாப்பு செட் ,தாயம்செட் ,மாமல்லபுரம் செட்,பள்ளிக்கூடம் செட், சோட்டா பீம் செட்,கேம்பே கவுடா செட், உழவர் சந்தை செட் ,ஐந்தினை செட், ஜல்லி கட்டு செட், வெட்டி வேர் விநாயகர், தஞ்சாவூர் உருட்டு பொம்மை, துலாபாரம் செட், அரசியல் தலைவர்கள்,ஆடும் குதிரை, மரப்பாச்சி பொம்மைகள், நடைவண்டி, சமையல் செட், பளிங்கு தூள் பொருட்கள், மரத்தாலான பொம்மைகள், தோடா எம்பிராய்டரி ,கொலுபரிசு பொருட்கள் இன்னும் ஏராளமான பொருட்கள் விற்பனைக்கு உள்ளன.

இந்த பொம்மைகள், தமிழ்நாடு, ஆந்திரா (கொண்டபல்லி மற்றும் எட்டி கொபக்கா மரபொம்மைகள்) கர்நாடகா (சென்னப்பட்டண) கொல்கத்தா, ராஜஸ்தான், பாண்டிச்சேரி மற்றும் பல்வேறு பகுதிகளில் இருந்து வரவழைக்கப்பட்டுள்ளன.

கண்காட்சியில் விற்பனை செய்யப்படும் அனைத்து கொலுபொம்மைகளுக்கும் 10% சிறப்புத் தள்ளுபடி, வழங்கப்படுகிறது. அனைத்து கடன்அட்டைகளும் எவ்வித சேவைக் கட்டணமின்றி ஏற்றுக் கொள்ளப்படும்.

கண்காட்சி மூலம் ரூ.50 இலட்சம் வரை விற்பனை நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கண்காட்சியில் விற்பனைக்கு உள்ள கைவினைப் பொருட்களை கோவை மாநகர மக்கள் வாங்கி பயன் பெறுவதுடன் இக்கலைப் பொருட்களை உற்பத்தி செய்யும் கைவினைஞர்களின் வாழ்க்கைத்த ரத்தைஉயர்த்த உதவிடுமாறுகேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு மாவட்ட ஆட்சியர் டாக்டர் ஜி.எஸ். சமீரன் தெரிவித்தார். நிகழ்ச்சியில் பூம்புகார் விற்பனை நிலைய மேலாளர் கி.ரொனல்டு செல்வஸ்டின் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

படிக்க வேண்டும்

spot_img