2014ல் பதவியேற்ற போது மேன்மையான நிர்வாகம், குறைந்த அளவு தலையீடு என்பது நநேரந்திர மோடி அரசின் கொள்கையாக அறிவிக்கப்பட்டது.
முன்னாள் ரிசர்வ் வங்கி ஆளுநர் பிமல் தலைமையில் செலவினங்கள் மேலாண்மை ஆணையம் 2014 பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது.
2015ல் பிமல் ஆணையம் தனது அறிக்கையை தாக்கல் செய்தது.
அதன் அடிப்படையில் என்ன நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன என்ன மாதிரியான செலவினங்கள் மேலாண்மை பரிந்துரைக்கப்பட்டன என்பவை குறித்த எந்த விவரமும் இது நாள் வரை வெளியிடப்படவில்லை.
இப்போது மீண்டும் 2021ல் செலவினங்களை கட்டுப்படுத்தவும், நிர்வாக நடைமுறைகளை மாற்றி அமைக்கவும், தலைமை பொருளாதார ஆலோசகர் சஞ்சீவ் தலைமையில் சிறப்பு குழு ஒன்று அமைக்கப்பட்டிருக்கிறது.
தேவையில்லாத துறைகளை அகற்றுவது குறித்தும் நடைமுறைகளை மாற்றுவது குறித்தும் அந்த குழு பரிந்துரைக்கும்.
தாராளமயம் அறிவிக்கப்பட்டு 30 ஆண்டுகள் கழிந்தும் கூட எந்த ஒரு பொருளாதார செயல்பாட்டுக்கும் 60க்கும் மேற்பட்ட ஒப்புதல்களும் தடையில்லா சான்றுகளும், நூற்றுக்கணக்கான விண்ணப்பங்களும், அனுமதிகளும் இன்னும் கூட தேவைப்படுகின்றன.
1991 பொருளாதார சீர்திருத்தத்தின் நோக்கம் நிறைவேறவில்லை. ஒப்புதல்களும், அனுமதிகளும் தடையில்லா சான்றுகளும் இல்லாமல் போனால் கையூட்டுக்கு வழியில்லாமல் போய்விடுமோ?