fbpx
Homeபிற செய்திகள்கால நிலை மாற்றத்தால் அச்சுறுத்தும் நோய்கள் ஆலோசனை தருகிறார் டாக்டர் கௌதமன்

கால நிலை மாற்றத்தால் அச்சுறுத்தும் நோய்கள் ஆலோசனை தருகிறார் டாக்டர் கௌதமன்

காலநிலை மாற்றத்தால் இருமல், சளி, காய்ச்சல் போன்றவை அதிகரிக்கும். இந்த நேரத்தில் பொதுமக்கள் குழந்தைகள் விழிப்புணர்வுடன் இருப்பது அவசியம் என்கிறார் டாக்டர் சு.கௌதமன்.

கோவை மாவட்டம் இயற்கையாகவே மற்ற மாவட்டங்களை விட வெப்பம் குறைவாக இருக்கும் மாவட்டம். கோவையின் இயற்கை சூழல் அவ்வாறாக அமைந்துள்ளது.

அதேபோல் ஆஸ்துமா அலர்ஜி போன்ற நோய்கள் கொஞ்சம் அதிகமாகவே உள்ளது. தற்போது காலநிலை மாற்றத்தால் அடிக்கடி மழை பெய்து வருகிறது. அதனால் குழந்தைகளுக்கும் பொதுமக்களுக்கும் நுரையீரல் பிரச்சனை இருமல் சளி, காய்ச்சல் என தொடர் பிரச்சனைகள் ஏற்படுகின்றன. இவற்றை கவனமாக கையாள வேண்டும்.

நுரையீரல் கிருமி தொற்று ஏற்பட்டால் உடனடியாக மருத்துவர் ஆலோசனை எடுத்துக் கொண்டால் நல்லது. சுய விருப்ப மருந்துகள் நோயின் தாக்கத்தை கட்டுப்படுத்தாமல் அதிகரிக்க செய்து விடுகிறது.

நுரையீரல் சிறப்பு மருத்துவர் கௌதமன், நுரையீரல் பிரச்சனையில் இருந்து பாதுகாத்துக் கொள்ள கூறியிருப்பதாவது. இயற்கையாகவே நமது மூச்சுக் குழாய் குளிரான காற்று சிறிதளவு சுருங்கக்கூடிய தன்மை கொண்டது.

ஏற்கனவே ஆஸ்துமா அல்லது சி ஓ பி டி எனக் கூடிய நூத்துக்குழாய் நோய் கொண்டவர்களுக்கு இந்த குளிரான காற்று சுவாசிக்கும் போது அவர்களின் ஆஸ்துமா போன்ற நோய்கள் தீவிரமடையும்.

அதனால் தான் மழை மற்றும் குளிர்காலங்களில் மருத்துவமனையை அணுகுவது அதிகம் ஆகின்றன. அதுமட்டுமல்லாமல் குளிர் காற்று மழைக் காலங்களில் வைரஸ் கிருமிகள் வேகமாக பரவ வாய்ப்புள்ளது.

கிருமிகள் பெருகுவதற்கு ஏற்றதாகும் வெயில் காலங்களை விட குளிர் காலங்களில் இருமல் சளி பிடிக்க அதுவும் முக்கிய காரணம். இந்த சளி இருமல் பெரும்பாலும் தானாக சரியாகிவிடும்.

ஆனால் ஒரு சிலருக்கு அது நிமோனியா எனும் நுரையீரல் தொற்று வரை தீவிரமடையலாம். அதனால் மூன்று நாட்களுக்கு மேல் சளி இருமல் மூச்சு திணறல் காய்ச்சல் இருப்பின் மருத்துவரை அணுகுவது பாதுகாப்பானது.

மழைக்காலங்களில் சிலர் பெரும்பாலும் வீட்டிலேயே இருக்க நேரிடும். அப்போது வீட்டில் உள்ள ஒரு சில தூசிகள் அதாவது நாய் அல்லது பூனை பொடுகு மற்றும் சில தூசிகள் அலர்ஜி எனப்படும் ஒவ்வாமையை ஏற்படுத்தக் கூடும். அதனால் தும்மல் சளி இருமல் கண் எரிச்சல் தோல்ரீதியான ஒவ்வாமை ஏற்பட வாய்ப்புள்ளது.

என்ன செய்யலாம் ?

குளிர்காலங்களில் இவ்வாறு சளி இருமல் வரும்போது கொதிக்க வைத்த தண்ணீரைப் பருகுவது நல்லதாகும்.

மேலும் மித கொதித்த தண்ணீரில் உப்பு சேர்த்து கொப்பளித்தல் வைரஸ் கிருமிகளின் பெருக்கத்தை குறைக்கும். மழைக்காலங்களில் வீட்டிலேயே இருக்க கூடியவர்கள் முக கவசம் அணிந்து இருந்தால் தூசி ஒவ்வாமையில் இருந்து தவிர்க்க முடியும்.

சளி இருமல் மூன்று நாட்களுக்கு மேல் இருப்பின் அருகில் உள்ள மருத்துவரை அணுகுவது பாதுகாப்பானது தாமதமாக மருந்தகத்தில் மருந்து வாங்கி உட்கொள்வது பாதுகாப்பற்றது.

அதனால் மோசமான பின்விளைவுகள் வரக்கூட நேரிடும். பீடி சிகரெட் புகையிலை புகைபிடிப்பதின் பின்விளைவாக சி.ஓ.பி.டி (COPD) எனப்படும் நாள்பட்ட நுரையீரல் அடைப்பு நோய் நுரையீரல் புற்றுநோய் ஏற்பட வாய்ப்புகள் அதிகம்.

அதிலும் பீடி புகையிலை உபயோகிப்பவர்களுக்கு நுரையீரல் புற்றுநோய் காண வாய்ப்புகள் மிக அதிகம். எனவே, புகை பிடிப்பதினை குறைப்பதும் நிறுத்துவதும் அவசியமாகும்.

டாக்டர் சு. கௌதமன், நுரையீரல் சிறப்பு மருத்துவர், 8870950576.

படிக்க வேண்டும்

spot_img