Homeபிற செய்திகள்கல்வி, வேலைவாய்ப்பில் 10% இட ஒதுக்கீடு வழங்க தமிழக அரசுக்கு தமிழ்நாடு பிராமணர் சங்கம் கோரிக்கை

கல்வி, வேலைவாய்ப்பில் 10% இட ஒதுக்கீடு வழங்க தமிழக அரசுக்கு தமிழ்நாடு பிராமணர் சங்கம் கோரிக்கை

தமிழ்நாடு பிராமணர் சங்கத்தின் புதிய நிர்வாகிகள் பதவி ஏற்பு விழா கோவை ராம்நகரில் உள்ள ஸ்ரீ ஐயப்பன் பூஜா சங்கத்தில் நடைபெற்றது.

பதிவு செய்யப்பட்ட தமிழ்நாடு பிராமணர் சங்கத்தின் மூன்றாம் மாநில தலைவராக ஸ்ரீமான் கோவை சிஜிவி கணேசன், முன்னாள் தலைவர் ஸ்ரீமான் பம்மல் ராமகிருஷ்ணன் தலைமையில் பதவி ஏற்றுக்கொண்டார்.

தொடர்ந்து மாநில அளவில் சுமார் 130 பேர் மாநில பொறுப்பாளர்களாக பதவி ஏற்றுக் கொண்டனர்.

தொடர்ந்து நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் சங்க நிர்வாகிகள் தெரிவித்ததாவது: தமிழ்நாடு பிராமணர் சங்கம் சார்பில் மத்திய அரசு அமல்படுத்திய முற்படுத்தப்பட்ட சமுதாயத்தில் பொருளாதார ரீதியாக பின்தங்கியுள்ள மக்களுக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் 10% சிறப்பு இட ஒதுக்கீடு திட்டத்தை தமிழக அரசு வழங்க வேண்டும் என்றும், தனியார் தொலைகாட்சிகள், யூடியூப் மற்றும் தமிழக தொலைக்காட்சிகளிலும் தொடர்ந்து பிராமண சமுதாயத்தை இழிவுபடுத்தி இன உணர்வை புண்படுத்தும் வகையில் பேசிவரும் ஆர் எஸ் பாரதி, சவுக்கு சங்கர், ராஜீவ்காந்தி தமிழன் பிரசன்னா ஆகியோர்களை கைது செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பல்வேறு சமூக பணிகளை செய்த கோவை சி.ஜி வெங்கடரமணன் அவர்களுக்கு கோவை ராம் நகர் பகுதியில் திருவுருவச் சிலை நிறுவுவதற்கு கோவை மாநகராட்சி மற்றும் தமிழக அரசு ஒப்புதல் வழங்க வேண்டும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

கூட்டத்தில், கோவை ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் உரிமையாளர் கிருஷ்ணன், வழக்கறிஞர் கோவை ராம்நகர் ஸ்ரீ என்.வி.நாக சுப்பிரமணியன், தொழிலதிபர் ஸ்ரீ ஜெகன் மற்றும் ஸ்ரீ மோகன் சங்கர், மைக்கோ குரூப் சேர்மன் திருப்பூர் வேலுச்சாமி, கோவை என்.எம்.மெட்ரிக் பள்ளி டிரஸ்டி கமாலுதீன், கோவை அலையன்ஸ் கிளப் ஆளுநர் ஸ்ரீநிவாசன், அலையன்ஸ் பிரபாகரன் மற்றும் மாநில முழுவதுமாக மாவட்ட கிளை நிர்வாகிகள் சுமார் 500 பேர் இதில் கலந்து கொண்டனர்.

கோவை மாவட்ட தலைவர் ஸ்ரீ சுப்ரீம் சங்கர் தலைமையில் தர்மராஜ், ராம்நகர் ஸ்ரீ முகுந்தன் ஆகியோர் விழாவிற்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

படிக்க வேண்டும்

spot_img