கோவை மாநகராட்சி மத்திய மண்டலம் வார்டு எண்.69க்குட்பட்ட பாரதி பூங்கா, ஜவகர் நகரில் ஆய்வு மேற்கொண்ட மாநகராட்சி ஆணையாளர் பிரதாப், அப்பகுதியில் மரக்கழிவுகளால் ஏற்படும் குப்பைகளை உடனடியாக அகற்ற தூய்மைப்பணியாளர்களுக்கு அறிவுறுத்தினார்.
மத்திய மண்டல உதவி ஆணையர் சங்கர், உதவி நகரமைப்பு அலுவலர் பாபு, உதவி பொறியாளர் கணேசன், உதவி செயற்பொறியாளர் புவனேஸ்வரி, மாமன்ற உறுப்பினர் சரவணக்குமார், மண்டல சுகாதார அலுவலர் ராமச்சந்திரன் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உள்ளனர்.



