Homeபிற செய்திகள்கல்லூரி மாணவர்களுக்கான வினாடி-வினா போட்டி

கல்லூரி மாணவர்களுக்கான வினாடி-வினா போட்டி

கோவை கரும்பு இனப் பெருக்கு நிறுவனத்தில், சுதந்திரத் தின் வைர விழா ‘அம்ருத் மகோத்சவத்தை’ கொண்டாடும் வகையில் கல்லூரி மாணவர்களுக்கான அறிவி யல் வினாடி-வினா போட்டி நடத்தப் பட்டது.

இப்போட்டியில் திருச்சிராப் பள்ளி பாரதிதாசன் பல்கலைக் கழகம், வேலூர் வி‌ஐ‌டி பயோ சயின்சஸ் அண்ட் டெக்னாலஜி கல்லூரி, திருவல்லா மார் அத்தனாசியோஸ் உயர்கல்வி கல்லூரி, கேரளா, கோயம்புத்தூர் அவினாசிலிங்கம் மனையியல் மற்றும் உயர்கல்விக் கழகம், கோவை காருண்யா இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி அண்ட் சயின்ஸ் மற்றும் அலகாபாத்தில் உள்ள சாம் ஹிக்கின் பாதம் வேளாண்மை, தொழில்நுட்பம் மற்றும் அறிவியல் கல்லூரி ஆகிய கல்வி நிறுவனங்களைச சேர்ந்த 50 மாணவர்கள் பங்கேற்றனர்.

வினாடி, வினா போட்டியை நிறுவனத்தின் முதன்மை விஞ்ஞானி முனைவர் து.புத்திர பிரதாப் நடத்தினார். “ஜானகி அம்மாள்”, “சி.ஏ.பார்பர்”, “டி.எஸ்.வெங்கட ராமன்”, “நார்மன் போர்லாக்” மற்றும் “எம்.எஸ்.சுவாமிநாதன்” என ஐந்து அணிகள் பிரிக்கப்பட் டன.

முதன் முதலில் ‘பச்சை ஒளிரும் புரதம்’ பிரித்தெடுக்கப்பட்ட உயிரி னத்தின் பெயர், (கோவாக்ஸின் தடுப்பூசியினை உருவாக்கிய) விஞ்ஞானி ‘கிருஷ்ணா எல்லா’வின் படத்தை கண்டுபிடிக்கும் வினா போன்ற கடினமான கேள்விகளைத் தவிர, பெரும்பாலான கேள்வி களுக்கு அணிகள் உற்சாகமாக பதிலளித்தன.

போட்டியின் முடிவில் “ஜானகி அம்மாள்”அணி 65 புள்ளிகளுடன் முதலிடத் தையும், “நார்மன் போர்லாக்” அணி (60 புள்ளிகள்), “எம்.எஸ்.சுவாமிநாதன்” அணி (55 புள்ளிகள்), “டி.எஸ்.வெங்கட ராமன்” அணி (50 புள்ளிகள்), “சி.ஏ. பார்பர்” அணி (20 புள்ளி கள்) அடுத்தடுத்த இடங் களையும் பிடித்தன.

வெற்றி பெற்ற அணியினருக்கு பாராட்டுச் சான்றிதழ்கள் மற்றும் பரிசுகள் வழங்கப்பட்டன. கேள் விகளுக்கு பதிலளித்த பார் வையா ளர்களும் பரிசுகளைப் பெற்றனர்.

கரும்பு இனப்பெருக்கு நிறுவ னத்தின் இயக்குநர் முனைவர் ஜி.ஹேமபிரபா, வினாடி-வினா போட்டியை தொடங்கி வைத்து பேசுகையில், கல்லூரி மாணவர்க ளுக்காக, கரும்பு இனப்பெருக்கு நிறுவனத்தில் இத்தகு வினாடி வினா போட்டி நடத்தப்படுவது இதுவே முதன்முறை. வினாடி வினா நிகழ்ச்சிகள் குழு மனப் பான்மையை ஊக்குவிக்கின் றன என்றார்.

போட்டியின் நடுவர்களாக நிறுவனத்தின் பயிர் பாதுகாப்பு பிரிவின் தலைவர் முனைவர் ஆர். விஸ்வநாதன், பயிர் உற்பத்திப் பிரிவின் தலைவர் முனைவர் சி.பழனிசாமி, முதன்மை விஞ்ஞானி முனைவர் ஏ.ரமேஷ் சுந்தர், பயிர் பெருக்க விஞ்ஞானி முனைவர் எச்.கே.மகாதேவசாமி செயல்பட்டனர்.

முதன்மை விஞ்ஞானி முனைவர் ஏ.வெண்ணிலா, முது நிலை விஞ்ஞானி முனைவர் கே.மோகன்ராஜ், பயிர் வினையியல் விஞ்ஞானி முனைவர் வி.கிருஷ்ணப்பிரியா ஆகியோர் மதிப்பெண் பதிவாளர்களாக (score keepers) செயல்பட்டனர்.

படிக்க வேண்டும்

spot_img