தி.மு.க. உட்கட்சி தேர்தல் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதை யொட்டி கோவை மாநகராட்சியில் வார்டு செயலாளர் உள்ளிட்ட பத விகளுக்கு கடந்தமாதம் தேர்தல் நடைபெற்றது. இதையடுத்து ஒன்றிய செயலாளர் பதவிக்கான தேர்தல் தொடங்கியது.
இதில் கோவை மாநகர் மேற்கு மாவட்டம் எஸ்.எஸ். குளம் ஒன்றியம், பெரி யநா யக்கன் பாளையம் கிழக்கு, மேற்கு ஆகிய ஒன்றிய செய லாளர் மற்றும் நிர்வாகிகள் பதவிக்கான தேர்தலுக்கு வேட்புமனு தாக்கல் தொடங்கியது.
எஸ்.எஸ்.குளம் ஒன்றிய செயலாளர் மற்றும்
நிர்வாக குழுவிற்கு தற்போதைய ஒன்றிய செயலாளர் சுரேஷ் குமார் தலைமையில் வேட்புமனுவை தலைமை பொதுக்குழு உறுப்பினரும், தேர்தல் பொறுப்பாள ருமான டாக்டர் குமர னிடம் கோவை மாநகர் மேற்கு மாவட்ட அலுவல கத்தில் வழங்கினர்.
அதைத்தொடர்ந்து ஒன்றிய செயலாளர் பதவிக்கு கள்ளிப்பாளையம் தேவராஜ் தலைமையிலான நிர்வாகிகள் தங்கள் வேட்பு மனுவை தாக்கல் செய்தனர். எஸ்.எஸ்.குளத்தில் 2 பிரிவினர் ஒன்றிய செயலா ளர் பதவிக்கு வேட்புமனு தாக்கல் செய் துள்ளனர்.
இந்தநிகழ்ச்சியில் முன் னாள் எம்.பி.நாகராஜ், கீரணத்தம் ஊராட்சி மன்ற தலைவர் ராசு என்ற பழனிச்சாமி, சர்க் கார் சாமகுளம் பேரூ ராட்சி துணைத்தலைவர் மணி என்ற விஜயகுமார், வெள்ளானைப் பட்டி ஊராட்சி மன்ற துணைத் தலைவர்ராசு கந்தசாமி, சிவகுமார், ரவி மேஸ்திரி மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
நாளை மறுநாள் (சனிக்கிழமை) வரை வேட்பு மனு தாக்கல் செய்யலாம் என்று அறிவிக் கப்பட்டு உள்ளது.



