fbpx
Homeபிற செய்திகள்கங்கா செவிலியர் கல்லூரியில் ‘விளக்கேற்றும் விழா’

கங்கா செவிலியர் கல்லூரியில் ‘விளக்கேற்றும் விழா’

கங்கா செவிலியர் கல்லூரியில் பிஎஸ்சி செவிலியர் மற்றும் செவிலிய பட்டய படிப்பில் இணையும் முதலாம் ஆண்டு மாணக்கர்களுக்கான விளக்கு ஏற்றும் விழா, கோவை வட்டமலைபாளையத்தில் உள்ள கங்கா செவிலியர் கல்லூரி புதிய அரங்கத்தில் நேற்று (ஜூலை 6) நடந்தது.

விளக்கு ஏற்றும் நிகழ்ச்சி செவிலியர் பயிலும் மாணக்கர்களின் அர்ப்பணிப்பை அங்கீகரிக்கும் முக்கியமான நிகழ்வாகும். சிறப்பு அழைப்பாளர்கள் குத்துவிளக்கை ஏற்றி வைத்தனர்.

கங்கா செவிலியர் கல்லூரி நிர்வாக அறங்காவலர் ராமா ராஜசேகரன் வரவேற்றார்.
தலைமை விருந்தினர் கோவை மருத்துவக்கல்லூரி மருத்துவமனை டீன் டாக்டர் அ.நிர்மலா பேசும்போது, ஒவ்வொரு செவிலியரும் தங்கள் தொழிலில் இருக்க வேண்டிய தன்னலமற்ற சேவையை வலியுறுத்தினார்.

தகவல் தொடர்பு திறன், உணர்ச்சி நிலைத்தன்மை, ஆலோசகர், கல்வியாளர் போன்ற அடிப்படை குணங்கள் இருக்க வேண்டும். மாறிவரும் தொழில்நுட்பத்தின் அடிப்படையில் செவிலியர்கள் தங்களின் திறமைகளை மேம்படுத்த வேண்டும்.

நோயாளியின் பாதுகாப்பின் முக்கியத்துவம் போன்றவற்றை குறிப்பிட்டார்.
சிறப்பு அழைப்பாளர் திருச்சூர், மேற்கு கோட்டை நர்சிங் கல்லூரி முதல்வர் ஷெர்லி பிரகாஷ் பேசும் போது, சமூக அக்கறை, ஏழை நோயாளிகளிடத்தில் அர்ப்பணிப்பு உணர்வுடன் செயல்பட வேண்டும். கற்பிக்கவும், நோயாளியை கவனிப்பதற்கான ஆர்வம், பணிவு, நெறிமுறைகள் மற்றும் நிபுணத்துவத்தை வளர்ப்பதன் முக்கியத்துவத்தையும் வலியுறுத்தினார்.

ஃப்ளோரன்ஸ் நைட்டிங்கேலின், ‘கை விளக்கு ஏந்திய காரிகை’ என்பதை விளக்கும் வகையில் மாணவி ஒருவரும், புதுமையான புதிய சகாப்தத்தை சித்தரிக்கும் வகையில், TRIAD TROOPERS’ என்ற தலைப்பில் வியக்கத்தக்க மாதிரி காட்சிப்படுத்தப்பட்டது.

ஷெர்லி பிரகாஷ், கல்லூரி முதல்வர் டீன் டாக்டர் எஸ்தர் ஜான் ஆகியோர் முதலாம் ஆண்டு செவிலியர், செவிலிய பட்டயப்படிப்பு மாணக்கர்களின் கையில் உள்ள விளக்கின் ஒளியை ஏற்றி வைத்தனர்.

அர்ப்பணிப்பு உள்ள செவிலியராக கடமையாற்றுவோம் என்று துணை முதல்வர் பேராசிரியை ஜெபகுமாரி கூற மாணக்கர்கள் உறுதிமொழி எடுத்தனர்.
டாக்டர் எஸ்தர் ஜான் நன்றி கூறினார்.

படிக்க வேண்டும்

spot_img