நாட்டின் புகழ்பெற்ற புத்தக பதிப்பாளர்களான ஓரியன்ட் பிளாக்ஸ்வான் 75-ம் ஆண்டு கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக, “ஆசிரியர்களுக்கான தொழில்முறை மேம்பாட்டு மையத்தை” தொடங்கு வதாக அறிவித்துள்ளது – இது ஒரு டிஜிட்டல் மையமாகும்.
ஓரியண்ட் பிளாக்ஸ்வான் தொழில் வளர்ச்சிக்கான மையம் (CPD) ஆனது, வயது, அனுபவம், கல்வித் தகுதி ஆகியவற்றைப் பொருட்படுத் தாமல், ஆசிரியர்களுக்குத் தங்களைத் தாங்களே மேம் படுத்திக் கொள்வதற்கான வாய்ப்புகளை வழங்குவதற்கான, ஆன்லைன் சான்றிதழ் படிப்புகளுக்கான உயர்தரத் தேர்வைக் கொண்டுள்ளது.
சான்றிதழ் படிப்புகள் முக்கிய தொகுதிகளாகப்பிரிக் கப்பட்டுள்ளன. அவை ஒவ் வொரு பாடத்திட்டத்தின் குறிப்பிட்ட அம்சங்களையும் மையமாகக் கொண்டு, பணிபுரியும் ஆசிரியர்கள் தங்கள் ஈடுபாட்டை விரைவு படுத்துவதையும், கற்றுக் கொள் வதையும் எளிதாக்குகிறது.
ஓரியண்ட் பிளாக்ஸ்வான் தொழில் வளர்ச்சிக்கான மையத் தில் உள்ள ஒவ்வொரு பாடமும், பல வருட அனுபவத்துடன், தேசிய மற்றும் சர்வதேச புகழ் பெற்ற சான்றளிக்கப்பட்ட ஆசிரியர் பயிற்சி நிபுணர்களால் வடிவமைக்கப்பட்டு உருவாக்கப் பட்டுள்ளது.
தேசியக் கல்விக் கொள்கை 2020 ஆல் பரிந்துரைக்கப்பட்ட பாடத் திட்டம் மற்றும் அறிவுறுத்தல் கட்டமைப்போடு அவை ஒருங்கி ணைக்கப்பட்டுள்ளன, மேலும் அவை இந்தியக் கல்விச் சூழலுக்குத் தனித்துவமாகப் பொருந்துகின்றன.
விழாவில், ஓரியன்ட் பிளாக்ஸ்வான் ஃபசிஹா காதர் கூறியதாவது: ஆசிரியர்களின் தொழில்முறை வளர்ச்சிக்கு ஆதரவளிப்பதற்கு பலவிதமான வாய்ப்புகளை வழங்குகிறோம்.
எங்களது பாட திட்டங்கள் சுய வேகம் மற்றும் மலிவு விலையில் உள்ளன. இன்று இந்திய வகுப்பறைகளின் முகம் மாறிவரும் நிலை யில், ஆசிரியர்களின் சமூகம் தொடர்ந்து கற்றுக்கொள்வதற் கான புதிய வாய்ப்புகளை ஆராய்கிறது.
ஹைதராபாத்தில் உள்ள ஆங்கிலம், வெளிநாட்டு மொழிகள் பல்கலைக்கழகத்தின் சிறந்த கல்வியாளர், எழுத்தாளர் மற்றும் டீன், கல்வியாளர் டாக்டர் சாம்சன் தாமஸ் குறிப்பிடுவது போல், பயிற்சி வகுப்பறை சூழலுக்கு ஆசிரியரை தயார்படுத்துகிறது.
வளர்ச்சி என்பது மாறிவரும் கற்பித்தல்-கற்றல் சூழலுக்கு ஆசிரியர் மாற்றியமைக்கும் செயல்முறையாகும் என்றார்.
இந்த டிஜிட்டல் தளத்தில் ஆசிரியர்களுக்கு, இலக்கணம் மற்றும் தொடர்பு, ஆசிரியர்களுக்கான 21-ம் நூற்றாண்டுத் திறன்கள், ஆசிரியர்களுக்கான தலைமைத்துவம் மற்றும் உரை அடிப்படையிலான கற்பித்தல், கற்றல் போன்ற பாட நெறிகள் அடங்கியுள்ளன.
தகவலுக்கு, லீttஜீs://நீஜீபீ.ஷீக்ஷீவீமீஸீtதீறீணீநீளீsஷ்ணீஸீ.நீஷீனீ இணையத ளத்தைப் பார்க்கலாம்.



