fbpx
Homeதலையங்கம்ஒலிம்பிக்கில் ஏன் இந்த பின்னடைவு?

ஒலிம்பிக்கில் ஏன் இந்த பின்னடைவு?

எதற்கெடுத்தாலும் நம்மால் முடியும் என்று வாய் பேச்சு பேசுகிறோம். ஆனால் ஒலிம்பிக் போட்டிகளில் நம்மால் வெற்றி பெற முடியவில்லையே? இதற்கு என்ன காரணம்? மற்ற நாடுகளை போல் பயிற்சியும், முயற்சியும் இல்லை என்பது தானே உண்மை? மத்தியில் விளையாட்டு துறைக்கென்று தனி அமைச்சகம் இருக்கிறது.

இந்த அமைச்சகங்கள் திட்டமிட்டு செயலாற்றி இருந்தால், படிப்படியாக முன்னேறி இருந்தால் கூட பதக்க பட்டியலில் சாதித்து இருக்க முடியுமே? ஏன் முடியவில்லை? தகுதி படைத்த இளைஞர்களும், இளம் பெண்களும் நம் நாட்டில் ஏராளம் இருக்கிறார்கள்.

ஆனால் அவர்களை தகுந்த முறையில் பயிற்சி அளித்து போட்டிகளுக்கு தயார் செய்ய வேண்டும். ஊக்கம் அளிக்க வேண்டும். ஏழை மாணவ,
மாணவிகளுக்கு சத்தான உணவு வழங்க வேண்டும்.

பள்ளி, கல்லூரி பருவத்திலேயே திறமையான வீரர்களை உடற்பயிற்சி ஆசிரியர் தேர்வு செய்து அவர்களுக்கு கடுமையான பயிற்சியும் சத்துள்ள உணவும் வழங்க வேண்டும்.

பொதுவாக விளையாட்டு துறையில் சிறந்து விளங்கும் மாணவ,
மாணவிகள் படிப்பில் சற்று பின்தங்கி இருப்பர்.

இவர்களை ஊக்கப்படுத்தி சிறப்பு ஆசிரியர்களை வைத்து பாடம் சொல்லி தந்து தேர்ச்சி பெறவும் செய்ய வேண்டும். அவர்களை ‘பெயில்’ ஆக்கி வேடிக்கை பார்க்க கூடாது.

அப்படி பார்த்தால் அவர்கள் விளையாட்டிலும் பின் தங்கி விடுவர்.
எனவே விளையாட்டில் ஆர்வமுள்ள மாணவ, மாணவிகளை தேர்ந்தெடுத்து பயிற்சி தந்து உருவாக்கினால் விளையாட்டு துறையில் நிச்சயம் அவர்களால் சாதித்து காட்ட முடியும்.

விளையாட்டு வீரர்களை மாணவ பருவத்திலேயே ‘பெயில்’ ஆக்கி வேடிக்கை பார்க்க கூடாது.

படிக்க வேண்டும்

spot_img