fbpx
Homeபிற செய்திகள்எம்.எஸ்.ஜி. சுவையூட்டியில் புரதச்சத்துகள்: ஆய்வறிக்கையில் தகவல்

எம்.எஸ்.ஜி. சுவையூட்டியில் புரதச்சத்துகள்: ஆய்வறிக்கையில் தகவல்

எம்.எஸ்.ஜி. என்று சுருக்கமாக அழைக்கப் படும் மோனோ சோடியம் குளுட்டாமேட் எனப் படும் சுவையூட்டியில் பல விதமான புரதச் சத்துக்கள் இடம் பெற்றுள்ளன என ஆய்வு அறிக்கைகள் தெரிவித்துள்ளன.

அஜினோமோட்டோ இந்தியா பி.லிட்-ன் நிர்வாக இயக்குநர் இஷிகா-கட்சுயுகி, இந்நிறுவன சந்தையாக்கல் மேலாளர் கோவிந்த பிஸ்வாஸ் ஆகியோர் கூறியதாவது:

பழங்கள், காய்கறிகள், தானியங்களில் இயற்கையாகவே பல்வேறு சுவை அடங்கியுள்ளது.

இது தான் குளுட்டாமேட் ஆகும். சமைக்கும் பதார்த்தங்களில், மோனோ சோடியம் குளுட்டாமேட்டை (எம்.எஸ்.ஜி.) சேர்க்கும்போது சுவை அதிகரிப்பதுடன் புரதச்சத்துகளும் கிடைக்கிறது.

இந்த சுவையூட்டியை சேர்ப்பதால் எவ்வித தீங்கும் ஏற்படாது. குறிப்பாக, மோனோ சோடியம் குளுட்டாமேட்டில் தாய்ப்பாலில் அடங்கியுள்ள அனைத்து புரதச்சத் துகளும் இடம்பெற்றுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

வீட்டில் ரசம் செய்யும்போது, தக்காளியை சேர்க்கி றோம். அப்போது ரசத்தின் சுவை எப்படி அதிகரிக்கிறதோ அதே போன்று தான் எம்.எஸ்.ஜி., சுவையூட்டியை சேர்க்கும் ஒவ்வொரு சமையல் பதார்த்தத்திற்கும் அதிக சுவை கிடைக்கிறது.

இந்த சுவையூட்டியை, ஜப்பான் நாட்டு விஞ்ஞானியும், பேராசிரியருமான கிக்குனே இக்கிடா என்பவர் 1909-ம் ஆண்டு கண்டறிந்தார். இயற்கையான முறையில் தயாரிக்கப்படும் குளுட்டாமேட் வாயிலாக கிடைக்கும் இந்த சுவைக்கு, ‘உமாமி’ என்றும் பெயர் இட்டார்.

மோனோசோடியம் குளுட்டாமேட் கரும்பு, மரவள்ளிக்கிழங்கு, மக்காச்சோளம் போன்ற தாவரங்களில் இருந்து தயாரிக்கப்படுகிறது. குறிப்பாக எம்.எஸ்.ஜி. சுவையூட்டி, கரும்பில் இருந்துதான் அதிக அளவில் தயாரிக்கப்படுகிறது.

விவசாயிகளிடம் இருந்து பெறப்படும் கரும்பு, ஆலைகளில் இடப்பட்டு சாறாக பிழியப்படுகிறது. அந்த கரும்புச்சாறு, நொதிக்க வைக்கப்பட்டு, எவ்வாறு பாலிலிருந்து தயிர் உருவாக்கப்படுகிறதோ அதே போன்று பதப்படுத்தப்படுகிறது.

அவ்வாறு கிடைக்கும் திரவம் குளுட்டாமிக் ஆசிட் என்று அழைக்கப்படுகிறது. குளுட்டாமிக் ஆசிட் பதனப்படுத்தப்பட்டு மோனோ சோடியம் குளுட்டாமேட் என்ற திடப்பொருளாக மாற்றப்படுகிறது.

வெப்ப மற்றும் குளிர் காற்று மூலம் உலர வைக்கப்பட்டு சிறிய, சிறிய பொடிகளாக (சர்க்கரை போன்று) செய்து, பாக்கெட்டுகளில் விற்பனைக்கு அனுப்பப்படுகிறது.

இவ்வாறு இயற்கை முறையில் தயாரிக்கப்படும் மோனோசோடியம் குளுட்டாமேட் 100 சதவீத சைவ உணவுப்பொருள் என்பது குறிப்பிடத்தக்கது என்றனர்.

படிக்க வேண்டும்

spot_img