fbpx
Homeபிற செய்திகள்என்டோட் ஐ ஹெல்த் பவுண்டேஷன் நடத்தும் ‘கிட்டப்பார்வை விழிப்புணர்வு வாரம்’

என்டோட் ஐ ஹெல்த் பவுண்டேஷன் நடத்தும் ‘கிட்டப்பார்வை விழிப்புணர்வு வாரம்’

இந்தியாவில் கிட்டப்பார்வை தொற்று நோய் குறித்தும், குழந்தைகளிடையே கிட்டப்பார்வை பிரச்சினை அதிகரித்து வருவது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத் தும் வகையில், என்டோட் பார்மசூடிகல்ஸ் நிறுவனம், ‘கிட்டப்பார்வை விழிப்புணர்வு வாரம்’ என்னும் பிரச்சாரத்தை, என்டோட் ஐ ஹெல்த் பவுண்டேஷன், ஸ்ட்ராபிஸ்மஸ் – பீடியாட்ரிக் ஆப்தால்மாலாஜிக்கல் சொசைட்டி ஆப் இந்தியா ஆகிய அமைப் புடன் இணைந்து வரும் 20-ம் தேதி வரை நடத்துகிறது.

கோவை உட்பட இந்தியா முழுவதிலும் கண் மருத்துவர்கள் மற்றும் மருந்துத் துறை நிறுவனங்கள் இருவரும் இணைந்து நடத்தும் முதல் கிட்டப்பார்வை விழிப்பு ணர்வு பிரச்சாரம் இதுவாகும். இதில் 400க்கும் மேற்பட்ட மருத்துவர்கள் பங்கேற்று இருக்கிறார்கள்.

ஒவ்வொரு நகரத்திலும் குறைந்தபட்சம் 5 மருத்துவமனைகள் இந்த விழிப்புணர்வு பிரச்சாரத்தில் ஈடுபடுகின்றன. இது தொடர்பாக மக்களிடம் கொண்டும் செல்லும் வகையில் என்டோட் பவுண்டேஷன் பள்ளிகளுடன் இணைந்து கிட்டப்பார்வை பற்றி மாணவர்களுக்கு எடுத்து கூறுவதோடு, இந்தூரில் பல்வேறு பகுதிகளில் இலவச கண் பரிசோதனை முகாம்களையும் ஏற்பாடு செய்ய உள்ளது.

கிட்டப்பார்வை பற்றி பெற்றோர்கள் மற்றும் குழந்தைகளுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த 800க்கும் மேற்பட்ட குழந்தை கண் மருத்துவர்கள் இந்த பிரச்சாரத்தில் பங்கேற்றுள்ளனர்.

என்டோட் பார்மசூடிகல்ஸ் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி

என்டோட் பார்மசூடிகல்ஸ் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி நிகில் கே மசூர்கர் கூறுகையில், கிட்டப்பார்வை என்பது இந்தியாவில் ஒரு முக்கிய பிரச்சினையாக உருவாகி உள்ளது.

இதற்கு போதிய தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்படாவிட்டால், இது ஒரு பெரிய பொது சுகாதார பிரச்சினையாக மாற வாய்ப்புள்ளது. கிட்டப்பார்வை அதிகரிப்புக்கு கோவிட்-19 ஒரு முக்கிய காரணியாக உள்ளது.

கொரோனா காலத்தில் உலகம் முழுவதும் போடப்பட்ட ஊரடங்கு காரணமாக குழந்தைகள் வீடுகளிலேயே இருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது. இதன் காரணமாக அவர்கள் பள்ளிக்கு செல்லாமல் வீடுகளிலேயே இருந்து பல்வேறு எலக்ட்ரானிக் சாதனங்களை பயன்படுத்தினர்.

இதுவே அவர்களுக்கு கிட்டப்பார்வை பிரச்சினை ஏற்பட முக்கிய காரணமாக அமைந்தது. இதில் மாற்றத்தை ஏற்படுத்த கிட்டப்பார்வை குறித்த விஷயங்களை பெற்றோர்கள் தெரிந்து கொள்ள வேண்டும். அது பற்றி அறிந்து கொள்ள அருகில் உள்ள கண் மருத்துவமனைகளை அணுகுவது மிகவும் அவசியம் ஆகும் என்றார்.

கோவை அரவிந்த் கண் மருத்துவமனை, குழந்தைகள் கண் மருத்துவ பிரிவு தலைமை மருத்துவர் கல்பனா நரேந்திரா கூறுகையில், கோவையில் கடந்த 2 ஆண்டுகளில் கிட்டப் பார்வை பிரச்சினை தொடர்பாக பரிசோதனைக்கு வரும் குழந்தைகளின் எண்ணிக்கையானது அதிகளவில் உள்ளது.

இது கண் சம்பந்தமான பல்வேறு பிரச்சினைகளுக்கு வழிவகுக்கலாம். பார்வை திறன் குறைபாடு, பார்வை இழப்பு போன்றவையும் ஏற்பட வாய்ப்பு உள்ளது என்றார்.

படிக்க வேண்டும்

spot_img