உலக குறை பிரசவ தினம் ஆண்டுதோறும் நவம்பர் 17-ம் தேதி உலகம் முழுவதும் அனுசரிக்கப்பட்டு வருகிறது. அதைத்தொடர்ந்து கோவை விமன்ஸ் சென்டர் பை மதர் ஹூட் மருத்துவமனையில் (நேற்று) உலக குறை பிரசவ தினம் கடைபிடிக்கப்பட்டது.
கோவை விமன்ஸ் சென்டர் பை மதர் ஹூட் மருத்துவமனை
கோவை விமன்ஸ் சென்டர் பை மதர் ஹூட் மருத்துவமனையில் பிறந்த 60-க்கும் மேற்பட்ட குறை பிரசவத்தில் பிறந்த குழந்தைகள் மற்றும் அவர்களது பெற்றோர்கள் ஆயிரம் ஊதா நிற பலூன்களை பறக்க விட்டனர்.
ஆஸ்பத்திரி முன்பு நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் விமன்ஸ் சென்டர் நிர்வாக இயக்குனர் டாக்டர் கோவிந்தராஜு, மருத்துவ இயக்குனர் டாக்டர் மிருது பாஷினி, டாக்டர்கள் கார்த்திக் பாலசுப்ரமணியம், டாக்டர் சரண்யா மாணிக்கம், இயக்குனர் கும ரேஷ் பாபு, பிஆர்ஓ நவீன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
இதுகுறித்து டாக்டர்கள் கார்த்திக் பாலசுப்ரமணியம், சரண்யா மாணிக்கம் ஆகியோர் கூறியதாவது: பொது மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத் தும் வகையில் கோவை விமன்ஸ் சென்டர் மருத்துவமனையில் உலக குறை பிரசவ தினம் அனுசரிக்கப்படுகிறது.
அதையொட்டி இங்கு பிறந்த 60-க்கும் மேற்பட்ட குழந்தைகள் மற்றும் பெற்றோர்கள் திரளாக கலந்து கொண்டு ஊதா நிற பலூன்களை பறக்க விட்டனர்.
குறை பிரசவத்தில் பிறந்த குழந்தைகளும் மற்ற குழந்தைகளுக்கு உள்ளது போன்று அரவணைப்பும் அன்பும் ஆதரவும்கிடைக்க வேண்டும். விழிப்புணர்வின் போது பகுதியாக இந்த நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. இவ்வாறு அவர்கள் கூறினர்.