கோவை இதய மருத் துவ சம்மேளனத் தின் மூன்றாவது பதிப்பு, தி ரெசி டென்சி டவரில், நடந்தது. இதை, சம்மேளன தலை வர் டாக்டர் டி.எம். டி.சரவணன் தொடங்கி வைத்தார்.இம்மாநாட்டில், கொங்கு மண்டலம் மற் றும் அதன் சுற்றுவட் டார பகுதியில் இருந்து, 400 க்கும் மேற்பட்டோர் பங்கேற்று பயனடைந்தனர். இருதய நோய்களை தடுப் பது மற்றும் இருதய நோய்க ளால் ஏற்படும் இறப்பை கட்டுப்படுத் துவதை நோக்கமாக கொண்டு, கோவை இருதய மருத்துவ சம்மேளனம், இந்நிகழ்வுக்கு ஏற்பாடு செய்துள்ளது.
இதுகுறித்து, கோவை இருதய மருத்துவ சம்மேள னத்தின் தலைவர் டாக்டர் டி.எம்.டி.சரவணன் பேசுகையில்,‘‘ இருதய நோய்கள் குறித்தும், ஊட்டச்சத்து உணவு முறையின் முக்கியத்துவம் பற்றியும், மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்து வதே, இச்சம்மேளனத்தின் நோக் கமாகும். மேலும், இருதய நோய்களுக்கும், சுற்றுச்சூழல் மற்றும் வாழ்க்கை முறைக்கும் உள்ள தொடர்பு குறித்து, விழிப்புணர்வை அதிகரிக்க வேண்டும்.
இம்மாநாடு, பொது மருத்துவர்கள் மற் றும் இருதய நோய் நிபு ணர்களுக்கும் பயனுள் ளதாக இருக்கும்,’’ என்றார்.கோவை இருதய மருத்துவ சம்மேளனத் தின் செயலாளர் டாக் டர் சர்வேஸ்வரன் பேசியதா வது: இதுபோன்ற மாநா டுகள் மூலமாக தான், நோயாளிகளுக்கு சிறந்த முறையில் சிகிச்சை அளிப் பது குறித்து, மருத் துவர்கள் தங்களின் அனுபவங்களை பகிர்ந்து கொள்ள முடியும். இதன்மூலம், நமது திறமைகளை மேம் படுத்தி கொள்ளலாம். இக்கட்டான சூழலில், நோயாளிகளுக்கு வெற்றி கரமான முறையில் எவ் வாறு சிகிச்சை அளிப்பது, நோயின் வீரியத்தை எப் படி கட்டுப்படுத்துவது என்பதை புரிந்து கொள்ளவும் உதவிபுரியும்.
மேலும் இம்மாநாட்டில், இருதயவியல் மாரடைப்பு தடுப்பது, உயர் ரத்த அழுத்தம், இருதய துடிப்பு தொடர்பான நோய்கள், இருதய வால்வு தொடர் பான நோய்கள் மற்றும் இருதய செயலிழப்பில் இருந்து மேம்படுத்துதல் ஆகியவற்றுக்கு, முக்கியத் துவம் அளிக்கப்படும். இதோடு, பல்வேறு இரு தய நோய்களின் ஆரம் பகால நோயறிதல் மற்றும் சரியான மேலாண்மை குறித்தும் விளக்கப்படும். இவ்வாறு அவர் பேசினார்.



