Homeபிற செய்திகள்இந்தியாவின் முதல் இன்குபேட்டரை துவங்கும் வாத்வானி அறக்கட்டளை, விமெண்டார்.ஏஐ

இந்தியாவின் முதல் இன்குபேட்டரை துவங்கும் வாத்வானி அறக்கட்டளை, விமெண்டார்.ஏஐ

விமெண்டார்.ஏஐ, வாத்வானி அறக்கட்டளை ஆகியவை மூலோபாய ஒத்துழைப்புக்காக, இந்தியா வில் உள்ள நுண் ணிய, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுடன் இணை ந்து செயல் படுவ தால், எம்எஸ்எம்ஈ நிறுவன ங்களின் விருப்ப மான நிறுவனமாக உள்ளன.

வாத்வானி அறக்கட்டளையின் துணை நிறுவனமான வாத்வானி அட்வான்டேஜ், அதன் உலகளாவிய நிதியுதவி, உலகத்தரம் வாய்ந்த கட்டமைப்புகள் மற்றும் ஆலோசனைக் கருவிகள் மற்றும் பயிற்சிகளை வழங்குவதன் மூலம், சிறு குறு நிறுவனங்களை விரை வாக வளர்ச்சி பாதையில் செல்வதற்கு உதவுவதற்காக அறியப்படுகிறது.

உலகத்தரம் வாய்ந்த, தொழில்நுட்பத்தால் இயக் கப்பட்ட வழிகாட்டுதல் தளத்துடன் 10 மடங்கு வணிக வளர்ச்சியை எம்எஸ்எம்ஈ நிறுவனங்கள் பெறுவ தற்கு விமெண்டார்.ஏஐ தொடர் ந்து ஒத்துழைப்பு அளித்து வருகிறது.

வாத்வானி அட்வ £ன்டேஜ் நிர்வாக துணைத் தலைவர் சமீர் சாத்தே கூறுகையில்,“விமெண்டார்.ஏஐ உடனான எங்கள் மூலோபாய கூட்டாண்மை இரு நிறுவனங்களுக்கும் ஒரு வெற்றியாகும். ஏனெனில் எங்கள் இருவரது நோக்கமும் எம்.எஸ்.எம்.ஈ க்களின் வளர்ச்சியை விரைவுபடுத்துவதாக உள்ளது.

வாத்வானி அறக்கட்டளையில் உள்ள நாங்கள், நாட்டின் நீண்டகால மற்றும் மிகப்பெரிய பிரச்சனை களில் ஒன்றான வேலையி ன்மையைக் குறைக்கும் ஒரு பெரிய பணியில் இருக்கி றோம்“ என்று கூறினார்.

விமெண்டார்.ஏஐ நிறுவனர் டாக்டர் ஸ்ரீநிவாஸ் சுந்துரு கூறுகையில், “இந்தக் கூட்டணி இந்தியாவின் முதல் எம்எஸ்எம்ஈ இன்குபேட்டரை உருவாக் குவதற்கான பணியில் முக்கியமான படியாகும்“ என்றார்.

சிறு குறு நிறுவனங் களின் இந்த வளர்ச்சி கூட்டணியானது, 5 கோடி முதல் 100 கோடி ரூபாய் வரையிலான வருவாய் விற்றுமுதல் உடைய தகுதியான எம்எஸ்எம்ஈ-க்களுக்கு, அந்நிறுவனங்களின் சொந்தத் திறன்களைக் காட்டிலும், வளர்ச்சிக்கான சாத்தியக்கூறுகளை விரைவாக உருவாக்குதல் மற்றும் அதிக மூலோபாயக் கண்ணோட்டத்துடன், சிறப்பு மற்றும் மானியத்துடன் கூடிய வழிகாட்டுதலை வழங்கும்.

விமெண்டார்.ஏஐ, தலைவர் சஞ்சீவ் திரிபாதி கூறுகையில் “தகுதியுள்ள மற்றும் எங்கள் இலக்குக் குழுவில் அங்கம் வகிக்கும் தேர்ந்தெடுக்கப்பட்ட எம்எஸ்எம்ஈ-க்கள் ஒரு மதிப்பீட்டு செயல்முறை யின் மூலம் தொழில் வல்லுநர்களால் வழிகாட்டுதல் பெறுவார் கள் மற்றும் மேம்பட்ட வணிக முடிவுகளுக்கு இலக்கு மேம்பாடுகளை வழங்க திட்ட மேலாண்மை அதிகாரிகள் அவர்களுக்கு உதவுவார்கள் என்றார்.

படிக்க வேண்டும்

spot_img